யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்! 

05 Apr, 2024 | 06:14 PM
image

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று (05) பகல் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டையிலிருந்து நவாலியை பகுதியை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். 

துணவியில் உள்ள குளத்துக்கு அருகிலுள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்ப முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகிலுள்ள மதிலிலும் பின்னர் மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது அதில் பயணித்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் 18 மற்றும் 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறை, நவாலி மற்றும் நாவற்குழி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள்...

2024-05-30 02:40:48
news-image

யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி...

2024-05-30 02:36:34
news-image

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட...

2024-05-30 02:31:15
news-image

யாழ் பொது நூலகத்தின் கதையின் ஏரியும்...

2024-05-30 01:49:12
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்...

2024-05-30 01:21:30
news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51