நடிகை தமிதா அபேரத்னவுக்கும் அவரது கணவருக்கும் விளக்கமறியல்

05 Apr, 2024 | 04:52 PM
image

கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (04) பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் இன்று (05) பிற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக்கோரி நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும் நேற்று (4) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-12-10 11:20:25
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-12-10 11:19:54
news-image

பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள ஆண்டான்குளம் மற்றும்...

2024-12-10 11:15:57
news-image

நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2024-12-10 10:41:56
news-image

மது போதையில் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ்...

2024-12-10 10:31:39
news-image

ரயில் - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-12-10 10:17:11
news-image

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

2024-12-10 10:06:38
news-image

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

2024-12-10 10:03:38
news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23