விமலுக்கு கை கொடுக்கும் வெற்றிமாறன்

Published By: Digital Desk 7

05 Apr, 2024 | 08:55 PM
image

தமிழ் திரையுலகின் வெற்றிகரமான நட்சத்திர முகங்களில் முதன்மையானவர் வெற்றிமாறன். சிறிய முதலீட்டில் உருவான தரமான படைப்புகளை கண்டறிந்து வெளியிடுவதற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்யும் பணியையும் செய்து வரும் வெற்றிமாறன்  தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மா பொ சி' எனும் திரைப்படத்தை வெளியிட உதவுகிறார்.

'கன்னி மாடம்' எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் உயர்ந்த நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மா பொ சி'  (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) எனும் திரைப்படத்தின் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சிராஜ் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் கம்பனி வெளியிடுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான பிரத்தியேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மாங்கொல்லை எனும் கிராமத்தில் வாழும் பொன்னரசன் சிவஞானம் என்பவரின் வாழ்வியல் தொடர்பான திரைப்படமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் விமல் இதற்கு முன் 'வாகை சூடவா' எனும் திரைப்படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் என்பதும், அந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்றது என்பதும், அதனையடுத்து 'மா பொ சி' படத்தில் விமல் ஆசிரியராக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்