உலகளவில் புற்றுநோய் பாதித்த ஆண்களில் 270 நபர்களுக்கு ஒருவருக்கு என்ற விகிதத்தில் டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இத்தகைய புற்றுநோய் உலக அளவில் அதிக அளவு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இருபதாவது இடத்தில் இருக்கிறது என்பதும், ஆண்டுதோறும் ஐந்து இலக்க எண்ணிக்கையில் இத்தகைய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. மேலும் இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
டெஸ்டிகுலர் புற்றுநோய் என்பது எம்முடைய உயிரணுக்களில் உண்டாகும் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி நிலையாகும். விரைகள் என்று அழைக்கப்படும் எம்முடைய விதைப்பையில் இத்தகைய புற்றுநோய் உண்டாகிறது. பதினைந்து வயதுக்கு மேல் நாற்பத்தைந்து வயதுக்குள் ஆண்களில் இருக்கும் விதைப்பைகளில் உள்ள இரண்டு விரையில் ஏதேனும் ஒன்றில் இத்தகைய புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். விரையின் வெளிப்புற பகுதியில் ஏற்படும் புற்றுநோய் உடலின் வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
உயிரணுக்களில் கட்டி அல்லது வீக்கம், விதைப்பை கனமானது போன்ற ஒரு உணர்வு, அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தொடர் வலி, விதைப்பையில் வீக்கம், வலி, அசௌகரிய உணர்வு, முதுகு வலி.. போன்ற அறிகுறிகள் இருந்தால்... உடனடியாக மருத்துவ நிபுணரை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
இதன்போது அல்ட்ரா சவுண்ட், ரத்த பரிசோதனை, திசு பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை ..போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புற்றுநோயின் வகை மற்றும் நிலையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர் இதன் போது புற்றுநோய் பாதித்த பகுதிகளுடன் அருகில் இருக்கும் நிணநீர் முடிச்சுகளையும் அகற்றுவர். வேறு சிலருக்கு கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி, இம்யூனோ தெரபி போன்றவற்றை ஒருங்கிணைந்தோ... பிரத்யேகமாகவோ வழங்கி நிவாரணம் தருவர்.
டொக்டர் குரு பாலாஜி
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM