தமிழர்களின் வாழ்வியல் அமைப்பில் பெண்மணிகளுக்கு சிறப்பான இடம் உண்டு. தமிழர்களின் கலாச்சாரத்தில் குடும்ப அமைப்பிற்கு தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. குடும்ப அமைப்பின் ஆணிவேராக திகழ்வது இல்லத்தரசிகளான பெண்மணிகள் தான். அவர்களின் எண்ணங்களும் செயல்களும் தான்.. இந்த சமூகத்தின் அங்கமாக இருக்கும் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், மேன்மையும், உயர்வையும் கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் உயர்கிறது என்றால் அந்த குடும்பத்தின் அச்சாணியாக திகழும் பெண்மணிகள் அயராது பாடுபடும் ஓய்வறியா உழைப்பாளிகளால் தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய பெண்மணிகளின் முதன்மையான விருப்பம் ஆயுள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்பதுதான். இத்தகைய வரத்தை அருளும் அற்புத ஆலயம் தான் இலுப்பைபட்டு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஆலயம்.
தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இலுப்பை பட்டு எனும் இடத்தில் சுயம்புவாகத் தோன்றி அருள் பாலிக்கும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு முறை விஜயம் செய்து, அங்கு மூலவராக திகழும் ஐந்து லிங்க திருமேனிகளை வணங்கிட வேண்டும்.
இங்கு அமிர்தம் கடையும் போது எழுந்த விடத்தை சிவபெருமான் உண்ண.. இதனை உணர்ந்த பார்வதி தேவியார் அவரது தொண்டை பகுதியை அழுத்தி, விடத்தை தொண்டையிலேயே தங்க வைத்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் இலுப்பை பட்டு என புராண வரலாறுகள் கூறுகிறது. இதனால் இங்கு பெண்கள் இறைவனை வணங்கினால் ஆயுள் முழுவதும் தீர்க்க சுமங்கலியுடன் வாழ்வதற்கான அருள் கிடைக்கும்.
இது மட்டுமல்ல பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாசத்தின் போது இங்கு ஐந்து லிங்கங்களை சிருஷ்டித்து அதனை வணங்கினர். இலுப்பை காயால் சிவபெருமானை மனதில் தியானித்து லிங்கத்தை சிருஷித்ததால் அவர்களுக்கு தனித்தனியாக காட்சியளித்த சிவபெருமான் வேண்டும் வரத்தை அருளினார். அதன் போது பஞ்சபாண்டவர்கள் இங்கு உங்களை தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கும் நீங்கள் அருள் பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் இங்கு ஐந்து லிங்கங்கள் பஞ்சலிங்கங்களாக மூலவர்களாக இருக்கிறார்கள்.
மகாபாரதத்து நாயகியான திரௌபதி இத்தலத்தில் எழுந்தருளும் வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகரை வணங்கியிருக்கிறார். ஒரே தலத்தில் வலம்புரி- இடம்புரி என இரட்டை விநாயகர்களை வணங்குவதும் புண்ணிய பலனாக கருதப்படுவதால் விநாயகரும் இங்கு விசேடமானவராக இருக்கிறார்.
பஞ்சபாண்டவர்களில் பீமன் வழிபட்ட சோடச லிங்கம் இங்கு தனி சன்னதியுடன் திகழ்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு பதினாறு வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஜோதிட சாஸ்திரங்களில் நாட்டம் கொண்ட பக்தர்கள் இங்கு நகுலன் வழிபட்ட சிவலிங்கமான ஸ்ரீ முக்தீஸ்வரரை வணங்கினால் பலன் உண்டு.
சனியால் பிடிக்கப்பட்ட நளன் இத்தலத்திற்கு வருகை தந்து சிவபெருமானை வணங்கிய போது அவரை பிடித்திருந்த சனியின் தாக்கம் குறைவதை உணர்ந்தார். அதனால் சனி தோச நிவர்த்தி தலமாகவும் இத்தலம் திகழ்கிறது.
தாயகத்திலிருந்து சென்னை வழியாக மயிலாடுதுறைக்கு வருகை தந்து, அதன் பிறகு, மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு வழியாக இலுப்பை பட்டு எனும் சிற்றூருக்கு வருகை தந்து, அங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்கலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM