அநுராதபுரம் சிறைச்சாலையில் இரு தரப்பினர் மோதல் ; மூவர் வைத்தியசாலையில்!

05 Apr, 2024 | 12:07 PM
image

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரைப் பார்வையிடச் சென்ற இருவருக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்  காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (4) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதியொருவரும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் பனியன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற இரு இளைஞர்கள் அங்கு கடமையிலிருந்த இரு சிறைச்சாலை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்  இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் கைதியைப் பார்வையிடச் சென்றதாகக் கூறப்படும் இந்த இரு இளைஞர்களும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை (05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை...

2026-08-10 10:50:05
news-image

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குச்...

2026-08-10 10:24:08
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

நாடளவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை...

2026-08-10 10:46:29
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04