ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்திற்கான மூன்று புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, ஹக்மீமன மற்றும் ரத்கம தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று புதிய அமைப்பாளர்களே இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்இ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அதற்கேற்ப தயாரத்ன த சில்வா பலபிடிய தொகுதிக்கும்இ யு.ஜீ.டீ. ஆரியதிலக ஹக்மீமன தொகுதிக்கும்இ அமரசிறி குறுவகெய் ரத்கம தொகுதிக்கும்இ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

தயாரத்ன த சில்வா பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவராக செயலாற்றியதுடன்இ யு.ஜீ.டீ.ஆரியதிலக தென் மாகாண சபையின் அமைச்சராகவும்இ அமரசிறி குறுவகெய் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றுகின்றனர்.