2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் புலம்பெயர்ந்தவர்களிடம் இடம் பெற்ற மோசடிகள் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மோசடிகளால் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தமாக 46,563 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதோடு, மக்கள் 651.8 மில்லியன் சிங்கபூர் டொலரை இழந்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டிலிருந்து மோசடி குற்றச் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகள் 2023 இல் பதிவாகியுள்ளதாக சிங்கபூர் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மோசடிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 500 வெளிநாட்டு பணிப்பெண்கள் தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து சிறந்த வேலை வாய்ப்புகள், அதிக ஊதியம் மற்றும் நிலையான அரசியல், பொருளாதார சூழலைத் தேடி புலம்பெயர்ந்தவர்களாவர்.
2020 ஆம் ஆண்டு மியான்மரைச் சேர்ந்த பணிப்பெண்ணை ஒருவர் வைபர் செயலி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார். அவர் தன்னை வங்கி ஊழியர் கூறி பணிப்பெண்ணிடம் வங்கி அட்டையை "புதுப்பிக்க" விவரங்களைக் கோரியுள்ளார். பின்னர் அவரது வங்கியிலிந்து 2,600 சிங்கபூர் டொலரை எடுக்கபட்டு 45 சிங்கபூர் டொலர் மட்டுமே மீகுதியாக இருந்துள்ளது. இந்நிலையில், வங்கியிலிருந்து 1,700 சிங்கபூர் டொலரை மீட்டெடுத்துள்ளதாக சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மோசடி குற்றச் செயல்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு கண்காணிக்கிறதா? நிதிக் குற்றங்களைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என கேள்விகைள் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கே.சண்முகம்,
மோசடிகளுக்கு எதிராக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி அளித்து தங்களால் இயன்றதைச் செய்வது வருகிறோம்.
சிங்கப்பூருக்குப் புதிதாக வேலைக்கு வரும் பணிப்பெண்களைத் தவிர்த்து ஏற்கெனவே வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நடப்பில் உள்ள மோசடி உத்திகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மோசடி புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் உள்ள மக்கள் 2019 ஆம் ஆண்டு முதல் $2.3 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடிக்காரர்களால் இழந்துள்ளனர். பலர் தங்கள் வருமானம் மற்றும் வாழ்நாள் சேமிப்புகளில் பெரும் பகுதியை இழந்துள்ளனர்.
நிதி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்லாமல், வீடுகளை உடைத்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பொதுவான குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்வது குறித்து புலம்பெயர்ந்த பணிப்பெண்களுக்கு பயிற்சியளிகளை பொலிஸ் வழங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM