வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் வியாழக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.
வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த மோட்டர் சைக்கிள் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தப்பிச் சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் சிசீரீவி கணொளி உதவியுடன் வவுனியா பொலிசார் தேடி வருகின்றனர்.
EP CBL 6679 இலக்கமுடைய என்னும் இலக்கமுடைய காரே விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM