BAIC X55 II SUV வாகனங்களுக்கான முன்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ்

Published By: Vishnu

05 Apr, 2024 | 02:01 AM
image

இலங்கையின் ஓட்டுநர் அனுபவத்தை மீள்வரையறை செய்வதை உறுதியளிக்கும் வருங்காலத்துக்கான  SUV வாகனங்கள்

கொழும்பு, 2024 ஏப்ரல் 4 --- ,லங்கையில் புத்தம் புதிய BAIC X55 II SUV வாகனங்களுக்கான முன்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்வில் 15 வாடிக்கையாளர்கள் தமது புத்தம் புதிய வாகனங்களுக்குரிய முற்பதிவுக்கான வைப்புக்களை மேற்கொண்டதுடன், டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு அற்புதமான பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில்  இந்நிகழ்வு அமைந்தது.

இலங்கையின் வாகன ஓட்டுநனர்களுக்கு உறுதியளிக்கும் புதிய புத்தாக்க சகாப்தம், தரமான தயாரிப்பு மற்றும் ,ணையற்ற வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும் வகையில் பீஜிங் ஓட்டோமோட்டிவ் ,ன்டஸ்ரி ஹோல்டிங்ஸ் கம்பனி லிமிடட் நிறுவனத்துடன் மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியிருப்பதாக டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.  வாகன உற்பத்தி, ஒருங்குசேர்த்தல் தொழில்துறை மற்றும் வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழில்துறைக்கு கைத்தொழில் அமைச்சினால்  இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் உள்நாட்டில் பெறுமதி சேர்த்தல் திட்டத்திற்கு அமைய வருங்காலத்துக்கான வாகன மொடல்களை ,றக்குமதி செய்து விநியோகிப்பதற்கான அனுமதியை நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது. 

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் இரண்டு பதிப்புக்களை - அடிப்படையான அம்சங்களுடன் BAIC X55 II Honour வாகனத்தையும், முழுமையான தெரிவுகளுடன் BAIC X55 II Luxury வாகனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

,ந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த டேவிட் பீரிஸ் குழுமத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.ரோஹன திசாநாயக்க குறிப்பிடுகையில், 'டேவிட் பீரிஸின் வாகன மரபானது புத்தாக்கமான கண்டுபிடிப்புக்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது. இலங்கையில் BAIC X55 II வாகனத்தை அறிமுகப்படுத்துவதானது குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். ஓட்டுநர் அனுபவத்தை மாற்றும் முன்னேற்றமான மற்றும் அடுத்த தலைமுறைக்கான அம்சங்களைக் இலங்கை ஓட்டுனர்கள் ,தன் மூலம் அனுவிக்க முடியும்' என்றார்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனத்தினால் சந்தைப்படுத்தப்படும் புத்தம் புதிய BAIC X55 II  வாகனங்கள், 5 ஆசனங்களைக் கொண்டதாகவும், 1500 சிசி டேர்போ ,ன்ஜின்ஸ்,  , 7DCT

பரவல், எரிசக்தியாகப் பெற்றோல் பயன்படாட்டைக் கொண்டதாகும். 19' அலோ வீட்ல்ஸ், அகல்பரப்பக் கூடிய சூரியக் கூரை, தானியங்கியாக மேல் எழக்கூடிய கதவுப் பிடிகள், இரட்டை புகைப்போக்கி என்பன அதன் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.மகேஷ் குணதிலக விளக்கமளிக்கையில், 'ஓட்டுநர் அனுபவம் நிச்சயம் தரமானதாக  இருக்கும். அறிவார்ந்த பாதுகாப்பு அம்சங்களுடன், அடப்டிவ் க்ரூஸ் கொன்ரோல், ஒழுங்கையிலிருந்து வெளிச்செல்லும்போதான எச்சரிக்கை, முன் ஆசனத்தின் கீழான சூடாக்கி மற்றும் காற்றோட்டம், சாரதி ஆசனத்தின் நினைவகம், பின் ஆசனத்தின் கோணமாக சீர் செய்யக்கூடிய திறன், பல்வேறு வர்ணங்களைக் கொண்ட உள்ளக மின்குமிழ் அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களை  இது கொண்டுள்ளது' என்றார்.

BAIC X55 II வகை வாகனத்தில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்களில் 6 காற்றுப் பைகள் காணப்படுவதுடன், சாரதி, பயணிப்பவர்கள், பக்கங்களில் உள்ள காற்றுப் பைகள் என்பன இதில் அடங்குகின்றன. அதனைவிடவும் சோர்வாக ஓட்டும்போதான எச்சரிக்கை, 360 பாகை கமரா மற்றும் திருட்டுக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டமைப்பு என்பனவும்  இதில் காணப்படுகின்றன. 

நவீன சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய 10 அங்குல மத்திய கட்டுப்பாட்டைக் கொண்ட திரை மற்றும் எல்சிடி ,ன்ஸ்ருமன்ட் திரை என்பனவும் காணப்படுகின்றன. அனைத்து வகை வாகனங்களும் வயர் தொடர்பு அற்ற போன்  இணைப்புக்கள், வைஃபை மற்றும் வயர் தொடர்பு அற்ற சார்ஜிங் வதிகளுடன் காணப்படுகின்றன. 

டேவிட் பீரிஸ் குழுமத்தின் ஆதரவுடன், உதிரி பாகங்கள் கிடைப்பது மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உட்பட, விற்பனைக்குப் பின்னரான  இணையற்ற சேவையை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்பது உறுதியளிக்கப்படுகின்றது. ஹைட்பார்க் கோர்னரில் முழு அளவிலான சேவை வசதி அமைக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த ஓட்டம் மற்றும் முன்பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், 2024 ஜுன் மாதத்திலிருந்து வாகனங்களின் விநியோகம் ஆரம்பிக்கப்படும்.

BAIC சீனாவின் வாகனத் துறையில் ஒரு முன்னோடி சக்தியாக இருந்து வருகிறது, அமெரிக்க மோட்டர்ஸ் கோப்ரேஷன், ஹூண்டாய் கொரியா, மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற முக்கிய சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்தியுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டுவரும் BAIC நிறுவனம், மெர்சிடிஸ்-பென்ஸ் குழுமத்தில் 9.98மூ பங்குகளைக் கொண்டிருப்பதுடன், இதுவே தனிப்பட்ட பங்காளர் ஒருவர் கொண்ட பாரிய பங்குத்தொகையாகும். BAIC குழுமத்தின் தயாரிப்புக்களில் பல்வேறு வகையான தனியார் கார்களான (ARCFOX> பீஜிங் மற்றும் BAIC ORV), சுயாதீன வணிக வாகனங்களான (BAIC Foton, BAIC Changhe) மற்றும் கூட்டு முயற்சி வர்த்தகநாமங்களான (Beijing Benz, Fujian Benz, Beijing Hyundai Motor  மற்றும் Foton Daimler).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03