தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி,
புத்தாண்டு கொண்டாட்டங்களின் தனித்துவமான சுப சடங்குகளான எண்ணெய் தேய்த்தல் தேசிய விழாவை ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு வத்தளை ஹெந்தல புராண ரஜமஹா விகாரையில் நடத்த சுதேச வைத்திய அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி சுபச் சடங்கு, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு, ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெறும். சுதேச வைத்திய அமைச்சு அந்த நாளை 'முருங்கை தினம்' என்று பெயரிட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் தோட்டத்தில், அதீத சத்துள்ள, அதிக மருத்துவ குணம் கொண்ட முருங்கை செடியை நடுகைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சடங்கிற்கு எண்ணெய் மற்றும் மரம் நடும் சடங்குக்கு முருங்கை செடிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளது.
மேலும், AyurEx 2024 கண்காட்சி மே 03, 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஆயுர்வேத பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மையங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்ட தொடர் ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய ஆயுர்வேத ஒழுங்கு விதிகள் கடந்த 1ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
அதனால் அழகு நிலையங்கள், சுதேச மருந்துகளின் போக்குவரத்து போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் கடைக்கிறது. நாம் அறிந்தபடி, தற்போது தாவர சாறுகளின் உற்பத்திக்கு 26 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சந்தை வாய்ப்பு உள்ளது. அவ்வாறான ஆயுர்வேத பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் எதிர்வரும் காலத்தில் சுமார் 03 பில்லியன் டொலர்களை சம்பாதிக்க முடியும் என நம்புகின்றோம்.
மேலும், ஆயுர்வேத மருத்துவத் துறையானது இந்நாட்டின் சுற்றுலாத் துறையில் ஊக்குவிக்கக்கூடிய ஒரு தனித்துவமான துறையாகும். உள்ளூர் மருத்துவ முறையில் கிடைக்கும் மசாஜ் முறைகளில் சுற்றுலாப் பயணிகள் தனி விருப்பமும் ஆர்வமும் கொண்டுள்ளனர். இங்கு, ஆயுர்வேத துறையின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும், 'பொடி மந்த்ரா' என்ற மசாஜ் மையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தொழில் தகைமைகளுடன் பயிற்றுவிக்கப்பட்ட விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் நோக்கில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளுக்காக இந்த நிலையங்கள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முறையான கல்வியை வழங்குவதன் மூலம் NVQ 4 தகுதி வாய்ந்த சிகிச்சையாளர்களை பணியமர்த்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 'ஸ்பா'க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயுர்வேத திணைக்களம் 'ஸ்பா'க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை என்பதை இங்கே கூற வேண்டும். ஆயுர்வேதத் துறையில் பதிவுசெய்யப்பட்ட மசாஜ் நிலையங்களை நாங்கள் முறையாக ஒழுங்குபடுத்துகிறோம்.
மேலும், சட்ட நடவடிக்கையின் காரணமாக சுதேச மருத்துவத் துறைக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பற்றாக்குறையால் போதைக்கு அடிமையான சிலர் சுதேச மருந்துகளை மாற்றீடாக எடுத்துக்கொள்கின்றனர்.
அதனால், உள்ளூர் மருந்துகளை தடையின்றி உற்பத்தி செய்வதற்கு இடமளிக்குமாறு கோரியுள்ளோம்.
இதேவேளை, பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உள்ளுர் மருத்துவ முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரம்பரிய வைத்தியர்களின் பிரச்சினைகளை அந்தப் பிரிவில் முன்வைக்க முடியும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்” என்று சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM