5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 3 உணவகங்கள் கொழும்பில் திறப்பு

05 Apr, 2024 | 07:00 AM
image

(ஸ்டெப்னி கொட்பிறி)

கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று உணவகங்கள் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டதாக  ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் இணை நிறுவுனருமான நவீத் காட்டர் தெரிவித்தார்.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி வணிக வளாகத்தில் ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லேயர்ட்ஸ் வார்ஃப் உணவகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதும் பல்தரப்பட்ட மற்றும் மலிவான உணவுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

எமது உணவகங்களை இலங்கையில் அறிமுகம் செய்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் இலங்கை சமையல் துறையில் முன்னணி சமையல் குழுவாக நாம் மாறியுள்ளோம்.இது மிகவும் பெருமைக்குரிய விடயமாகும். ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லேயர்ட்ஸ் வார்ஃப் உணவகமானது தி பொலன் ஸ்டூடியோவின் கனிஷ்க பெரேராவினால் வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டது என்றார்.

ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் இணை நிறுவுனருமான நதீம் ரஜாப்தீன்  கூறுகையில்,

ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லேயர்ட்ஸ் வார்ஃப் உணவகம் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி அன்று கொழும்பு ஹெவ்லொக் சிட்டி வணிக வளாகத்தில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட மூன்றாவது உணவகம் இதுவாகும்.

இதற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட இரண்டு உணவகங்களும் கொழும்பு சிட்டி சென்டர் மற்றும் வன் கோல் பேஸ் ஆகிய வணிக வளாகங்களில் அமைந்துள்ளன. ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பன்முக கலாச்சாரங்களுக்கு மரியாதை செலுத்துகிறது.

ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் உலகளாவிய ரீதியிலான பல்வேறு உணவு வகைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஃபுட் ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லேயர்ட்ஸ் வார்ஃப் உணவகத்தில் டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்நிலையில் QR குறியீடுகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் எளிய முறைகளும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right