கட்சிகளை உடைக்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி - வே. இராதாகிருஷ்ணன்

Published By: Digital Desk 7

04 Apr, 2024 | 06:03 PM
image

கட்சிகளை உடைப்பதற்கான எதிர்பார்ப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்திருக்கின்றது.

இது பெரும்பாலும் பேசப்படுகின்ற விடயமாக இருந்தாலும் இதிலே நன்மையும் இருக்கின்றது தீமையும் இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக இரண்டு தேர்தலுக்கு செலவழிக்கின்ற செலவை ஒரே தேர்தலில் வைக்கின்ற நடவடிக்கை எடுக்க முடியும்  அந்த வகையிலே இந்த தேர்தல் இரண்டையும் ஒன்றாக வைத்தால் செலவை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதே நேரத்தில் காட்சிகளுக்கு இடையிலே பலவிதமான குழப்பங்கள் நிலவுகின்ற காரணத்தினால் எந்த கட்சியில் இருந்து வாக்கு கேட்பது? எவ்வாறு உடைத்துக் கொண்டு செல்வது? யாரை உடைக்கலாம்? என்ற எதிர்பார்ப்புகளோடு இருக்கின்ற காட்சிகளுக்கு இது ஒரு சிக்கலாக அமையும். ஏனென்றால் ஜனாதிபதி ஒருவர் வந்த பிறகுதான், அடுத்து ஜனாதிபதியின் கட்சி வருவது மரபாக உள்ளது. அல்லது பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வருகின்ற தலைவர் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற மரபு இங்கு இருக்கின்றது.

ஆனால் இந்த தேர்தல்களை ஒன்றாக வைத்தால் இந்த சிக்கல் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கான எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர் எல்லா காட்சிகளையும் உடைத்து அவற்றை எடுப்பதற்கான வசதிகள் என்னவென அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில் அவரது கட்சியை உடைக்கின்ற விடயம் சாத்தியமற்றதாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:02:32
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00