எம்முடைய பிள்ளைகள் பாடசாலையில் சக மாணவ மாணவிகளுடன் பழகும் போதும் பேசும் போதும் ஏதேனும் தடைகள் உள்ளனவா? என்பதனை எம்முடைய பெற்றோர்கள் சரியான தருணத்தில் கண்டறிய வேண்டும்.
ஏனெனில் பிள்ளைகள் ஐந்து வயது முதல் ஒன்பது வயதிற்குள் சமூகத்துடன் தொடர்பு கொள்வதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படலாம்.
அதனை உரிய தருணத்தில் கண்டறிந்து நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டும். தவறினால் பிள்ளைகளின் எதிர்காலம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எம்முடைய பிள்ளைகள் மற்றவர்கள் பேசும் போது அவர்களின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுவார்கள். இது இயல்பானது.
ஆனால் சில குழந்தைகளுக்கு இது இயல்பானதாக இருக்காது. அவர்கள் தங்களுடன் பேசுபவர்களின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்புவதில்லை.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பதிலையும் சொல்வதில்லை. மேலும் தங்களுக்கு தோன்றும் பதிலை அல்லது பிரத்யேக செயல்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்வர். இதனை மருத்துவ மொழியில் ஓ்ஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன தெரபிகள் மூலம் சிகிச்சை அளித்து நிவாரணம் அளிக்கலாம்.
ஓஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என்பது எம்முடைய நரம்புகளில் ஏற்படும் செயல் திறன் குறைபாடாகும். இதன் போது பிள்ளைகள் ஒரே மாதிரியான நடத்தையை கொண்டிருப்பார்கள். எளிதாக விளக்க வேண்டும் என்றால் வீரியம் குறைந்த ஒட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஸார்டர் என்றும் குறிப்பிடலாம். பாடசாலைகளுக்கு செல்ல பிள்ளைகளிடத்தில் இத்தகைய பாதிப்பினை அதிகம் காணலாம்.
கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுவதில் குறைபாடு, சமூக அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் தயக்கம், உரையாடுவதில் சிக்கல், உடல் மொழியை வெளிப்படுத்துவதில் வினோதம், இனம் கண்டறிய இயலாத முக பாவனை போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஒஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும் என அவதானிக்கலாம்.
இவர்களை உளவியல் மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் முறையாக பரிசோதித்து, அதற்கேற்ப சிகிச்சைகளை தீர்மானிப்பர். ஸ்பீச் தெரபி, பிசிகல் தெரபி, நடத்தை சிகிச்சை, நடத்தை அவதானிப்பு, மருந்தியல் சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை ஒருங்கிணைந்து வழங்கி பிள்ளைகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
டொக்டர் காமினி
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM