குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர் ஆலயம்

Published By: Digital Desk 7

04 Apr, 2024 | 03:21 PM
image

இளைய தலைமுறையினர் அறிவியல் பூர்வமான விடயங்களில் ஆர்வத்தை செலுத்தி இதற்கு முன்னர் கற்பிதம் செய்யப்பட்ட பல விடை தெரியாத வினாக்களுக்கு உரிய விடைகளை தெரிந்து கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த தசாப்தங்களில் குழந்தை பேறு இல்லையென்றால் இறைவன் அருள் புரிவான் என்ற இறை நம்பிக்கையுடன் பயணித்தனர்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் செயன்முறை கருத்தரிப்பு என்ற ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதனூடாக குழந்தை செல்வத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இருப்பினும் இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தையை பிரசவித்து வாரிசை உருவாக்கிக் கொள்வதில் தான் இன்றளவும் எம்முடைய மக்களின் எண்ணமும், ஆர்வமும் இருக்கிறது.

இதற்கு என்னுடைய ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிட்ட பல பரிகாரத் தலங்களுக்கு  சென்று இறை வழிப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் மழலைச் செல்வத்தை பெறுகின்றனர். இதுபோன்று மழலைச் செல்வ பாக்கியத்தை வாரி அருளும் ஆலயம் தான் வழுவூர் வீராட்டனேஸ்வரர் ஆலயம்.

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள வழுவூர் வீராட்டானேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று கஜ சம்ஹார மூர்த்தி கோலத்தில் சுயம்புவாக அவதாரமெடுத்து அருள் பாலிக்கும் சிவபெருமானை தரிசிக்க வேண்டும். ஏனைய தலங்களில் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு சிவபெருமானின் உள்ளங்காலை தரிசிக்கலாம்.

இங்குள்ள தீர்த்தத்தில் அமாவாசை தோறும் சிவபெருமான் நீராடுவதால் அமாவாசை தினங்களில் இங்கு நீராடி கீர்த்திவாசரை தரிசித்தால், குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இங்கு உள்ள ஐந்து கிணறுகளில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன என்றும் அவை பாதாள கங்கை, பிரம்ம தீர்த்தம் என ஐந்து வகை தீர்த்தம் என்று குறிப்பிடப்படுகிறது.

மக்கட் பேறு இல்லாத தம்பதிகள் அமாவாசை தினங்களில் இங்கு வருகை தந்து ஐந்து தீர்த்தங்களிலும் நீராடி அல்லது தலையில் தெளித்துக் கொண்டு இறைவனை வணங்கினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்கிறார்கள். சிலர் இந்த தீர்த்தத்தை தொடர்ந்து 12 அமாவாசை தினங்களில் அருந்தினாலும் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் மட்டுமல்ல உங்களது பிள்ளைகள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டிருந்தாலும் அல்லது உயர்கல்வி கற்பதில் சிக்கல்கள் இருந்தாலும் இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அந்த தீர்த்தத்தை பருகி வந்தால் கல்வி கற்பதில் உள்ள தடை அகலும் என்றும், உயர் கல்வி கற்பதற்கான இடையூறு விலகும் என்றும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கேட்டை நட்சத்திர தினத்தன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் கல்விக்கான தடைகள் அகன்று உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சுயம்புவாக அருள் பாலிக்கும் சிவபெருமானின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்திற்கு அனுமதி பெற்று விசேடமாக பூஜை செய்தால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சனி பகவான் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி, தன்னுடைய கால் ஊன சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்ற காரணத்தினால்  சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இங்குள்ள சிவபெருமானையும், தனி சன்னதியில் அருளும் சனி பகவானையும் தரிசித்தால் சனி தோஷம் விலகி நன்மை பயக்கும்.

சப்த மாதாக்களில் ஒருவராக திகழும் வாராகி அன்னை இங்கு சிவபெருமானையும், பார்வதியையும் பூஜித்ததாகவும் வரலாறு உண்டு. அதனால் வாராகியின் அருளை விரும்புபவர்கள் இங்கு வந்துவாராகி அன்னையே தரிசித்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிட்டும்.

இந்தத் தலம் தாருகாவனம் என்றும் அழைக்கப்படுகிறது. தாருகா வனத்தில் தான் பிச்சாடனர் எனும் கோலத்தில் சிவபெருமானும், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு பகவானும் ஒன்றிணைந்து சாஸ்தா எனும் ஐயப்பன் இங்கு தான் பிறந்தார் என்றும் புராண வரலாறுகள் கூறுகிறது. இங்கு ஐயப்பனுக்கென்று பால சாஸ்தா என தனி சன்னதியும் இருக்கிறது. இங்கு வந்து ஐயப்பனை விரதமிருந்து தரிசிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி பல சிறப்புகளை கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட தொன்மையான ஆலயம் என்பதால் புலம் பெயர்ந்திருக்கும் எம்முடைய தமிழர்கள் இந்திய விஜயத்தின் போது இந்த ஆலயத்திற்கு தவறாமல் தொடர்ந்து வருகை தருகிறார்கள்.  ஆண்டுதோறும் இங்கு வருகை தந்து தங்களின் புண்ணிய கணக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  தங்களுக்கான வரத்தையும் பெற்று மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

தொகுப்பு சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

2024-05-29 17:41:04
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

2024-05-28 15:12:02
news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24