14 வயது சிறுமியை ஏமாற்றி 2 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மனநலம் குன்றியவர் என்பதுடன் இந்தச் சிறுமி தனது தாய் மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சிறுமி, தனது குடும்பத்தினர் இரவு உறங்கிய பின்னர் அயல் வீட்டில் உள்ள இளைஞரை சந்திப்பதற்காக தினமும் இரவு அந்த இளைஞரின் வீட்டுக்கு செல்வதாகவும் இதன்போது, அந்த இளைஞர், சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் பாணந்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM