மாத்தளையில் ஏழை குடும்பமொன்றுக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ண டில்சான் அழகிய வீடு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.

மாத்தளை அகலகவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மலா பத்மகுமார மெனிக்கே என்ற பெண்ணுக்கு இவ்வாறு வீடு ஒன்றை அமைத்துக்கொடுத்துள்ளார்.

குறித்தப் பெண்ணின் கணவர் கடந்த  வருடம் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனது இரு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக தனது வீட்டை ஐந்து இலட்சத்துக்கு அடகு வைத்துள்ளார்.

பின்னர் அடகு வைத்த வீட்டை திருப்ப முடியாமல் போனதையிட்டு தனக்கு உதவி செய்யுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

இதனைப் பார்த்த டில்சான் 25 இலட்சம் ரூபாவை வீடு அமைக்க கொடுத்துள்ளார்.

வீட்டின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று வீட்டை திறந்து வைத்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்.