சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு கால சலுகை மூலமாக வியத்தகு தள்ளுபடிகள் மற்றும் ஒப்பற்ற சேமிப்புக்களை வழங்குகின்றன

04 Apr, 2024 | 10:11 AM
image

அனேகமான இலங்கை மக்களை பொறுத்தவரையில், பாரம்பரியமாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற விடுமுறையாக புத்தாண்டு காணப்படுவதுடன், புத்தாண்டு உணவு, பாரம்பரியமான சம்பிரதாயங்கள் மற்றும் விநோத கொண்டாட்டங்கள் என நாடெங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டுகின்ற ஒரு காலமாகும். 

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ள நாடு தயாராகி வருகின்ற இவ்வேளையில், சம்பத் வங்கியானது சம்பத் அட்டைதாரர்களுக்கு “சம்பத் பாரம்பரியம்” மூலமாக புத்தாண்டுடன் இணைந்து அனைத்து அற்புதமான சம்பிரதாயங்களையும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வண்ணம் இப்புத்தாண்டுக் காலத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியமைப்பதற்கு மீண்டும் முன்வந்துள்ளது.

பருவகால சலுகைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையை சம்பத் கார்ட்ஸ் கொண்டுள்ளதுடன், சம்பத் அட்டைகளின் அசல் சலுகைகள் நீண்ட காலமாக ஒரு பாரம்பரியமாகவே மாறிவிட்ட வகையில் இன்று அவை பெயர்பெற்றுள்ளன.

இந்த ஆண்டில் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டுத் தள்ளுபடிகள், புத்தாண்டு பருவகாலத்தைக் கொண்டாடும்போது சம்பத் வங்கி எவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒன்றியுள்ளது என்பதை அட்டைதாரர்களுக்கு நினைவுபடுத்துகின்ற ஒரு வழிமுறையாகும். “சம்பத் பாரம்பரியம்” மூலமாக இந்த தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அட்டைதாரர்கள் தமது கனவுகளை நனவாக்கிக்கொள்ள உதவும் வகையில், 50% வரையான வியத்தகு தள்ளுபடிகளை வழங்கி, பண்டிகையின் அனைத்து பாரம்பரியங்கள் மற்றும் சம்பிரதாயங்களையும் அவர்கள் கொண்டாடுவதற்கு சம்பத் கார்ட்ஸ் இடமளிக்கின்றன.

“அட்டைதாரர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்ற சமயத்தில் அவர்கள் பாரிய சேமிப்புக்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதன் மூலமாக புத்தாண்டுக் காலம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்துவதில் சம்பத் வங்கி பெரும் மகிழ்ச்சி அடைகின்றது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே அட்டைதாரர்கள் தமது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்தையும் கொள்வனவு செய்யும் அதேசமயம் கணிசமான சேமிப்புக்களையும் பெற்றுக்கொள்ள இடமளிக்கும் அற்புதமான தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை ஒன்றிணைத்து வழங்கப்படுவதை நாம் அவர்களுக்கு உறுதி செய்துள்ளோம்” என்று சம்பத் வங்கி, அட்டை மையத்தின் உதவிப் பொது முகாமையாளர் ஷிரான் கொஸ்சின்ன அவர்கள் குறிப்பிட்டார்.

NOLIMIT, Cool Planet, Fashion Bug, Kelly Felder, Spring & Summer, CIB, ASB, ZigZag, Mondy, Hameedia, Emerald, Crocodile, House of Fashion, The Factory Outlet மற்றும் Diliganz அடங்கலாக நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான நவநாகரிக மற்றும் சில்லறை வர்த்தக நாமங்களில் 25% வரையான தள்ளுபடிகளின் பலனாக சம்பத் வங்கி அட்டைதாரர்கள் அதிநவீன நவநாகரிகங்களுடன் தமது அலுமாரிகளிலுள்ள ஆடையணிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

புத்தாண்டு காலத்தில் தமது வாழ்வுகளை மேலும் பளபளக்கச் செய்ய விரும்புகின்ற அட்டைதாரர்கள் Vogue Jewellers, Raja Jewellers, Abdeen Jewellers, Alankara Jewellers, Aminra, Arthur De Silva, Chamathka Jewellers, Diamond Dreams, Mallika Hemachandra Jewellers, Radella, Tiesh, Premedasa Jewellers, Beverly Jewellers மற்றும் Fior Drissage Jewellers Ltd அடங்கலாக தெரிவுசெய்யப்பட்ட முன்னணி ஆபரண காட்சியறைகளில் 24 மாதங்கள் வரையான வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுடன் 50% வரையான சேமிப்புக்களைப் பெற்று அனுபவிக்க முடியும். 

மேலும், Bata, DSI, DSI Premier, Genelle, Helanka மற்றும் Tony Pelle ஆகிய விற்பனை மையங்களில் 25% வரையான சேமிப்புக்களுடன் தமக்காக புதிய பாதணிகளை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் அவர்களுக்கு உள்ளது. 

William Penn, Toss, British Cosmetics மற்றும் Royal Cashews அடங்கலாக பரிசுப் பொருட்கள் மற்றும் கடிகார விற்பனை மையங்களில் 30% வரையான சேமிப்புக்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன.

பெற்றோரும் தமது பிள்ளைகளுக்காக Arista, Velona, Tiny Tots, Nesh Kids, Kids Warehouse மற்றும் Lavender Lady போன்ற காட்சியறைகளில் பரிசுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வாங்கும் போது 25% வரை சேமித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அலங்கரிப்பதற்கான வருடத்தின் மிகச் சிறந்த தருணமாக புத்தாண்டு காணப்படுவதால், Celcius, Multilac, Homemart, மற்றும் Hunters ஆகியவற்றில் 50% வரையான தள்ளுபடிகளை சம்பத் அட்டைகள் வழங்குகின்றன.

Abans, Arpico Furniture, Browns, Ceylon Furniture, Damro, Dialog, Dinapala, Eser Marketing International, Mike Audio, Seetha Holdings, Yamaha Music Centre, Singer, Singhagiri, Metropolitan மற்றும் பலவற்றில் 40 மாதங்கள் வரையான வட்டியின்றிய இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களுடன் விடுமுறைக் காலத்தில் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் தளபாடங்களை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு சம்பத் அட்டைகள் வழிவகுப்பதால் வீட்டுத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை தரமுயர்த்திக்கொள்வது மிகவும் இலகுவாக மேற்கொள்ளப்படக்கூடியதாக உள்ளது.

கல்வித் தேவைகள் அல்லது பொழுதுபோக்குக்காக வாசிப்பதில் பிரியமுள்ளவர்களுக்காக புத்தகங்களை கொள்வனவு செய்ய விரும்புகின்றவர்களுக்கு, Atlas.lk, Promateworld.com மற்றும் Promate விற்பனை மையங்களுக்கு செல்லும் போது 30% வரையான தள்ளுபடிகள் கிடைக்கப்பெறுகின்றன. DS Jayasinghe, Vasan Eye Care மற்றும் Wickramarachchi Opticians ஆகியவற்றில் 50% வரையான சேமிப்புக்களுடன் சம்பத் அட்டைதாரர்கள் தமது கண்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பாரம்பரியமான இனிப்பு தின்பண்டங்கள் இல்லாமல் புத்தாண்டு பருவகாலம் ஒருபோதும் முழுமையாகாது. அந்த வகையில், அட்டைதாரர்கள் தமது வங்கியிலுள்ள பணத்தை விரயமாக்காது தம்முடைய சமையலறையில் தேவையான அனைத்தையும் நிரப்பிக்கொள்ள Arpico, Cargills, Glomark, Keells ஆகிய சுப்பர்மார்க்கெட்டுக்களில் புத்தம்புதிய பொருட்களுக்கு 25% வரையான தள்ளுபடிகளையும், Laugfs சுப்பர் மார்க்கெட்டில் மொத்த பட்டியல் தொகையில் 10% தள்ளுபடியையும் சம்பத் அட்டைகள் வழங்குவதுடன், 2024 மார்ச் 30 முதல் 2024 ஏப்ரல் 11 வரை Cargills அவர்களுடைய மொத்த பட்டியல் தொகையில் 10% தள்ளுபடியை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற அட்டைதாரர்களின் நிதியியல் சுமையை இலகுபடுத்தும் வகையில் அவர்களுக்கு உதவுவதிலும் வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது.

கல்வி,  வைத்தியசாலை கொடுப்பனவுகள், காப்புறுதி மற்றும் வாகன பராமரிப்பு கொடுப்பனவுகள் ஆகிய பெருமளவில் நிதி தேவைப்படுகின்ற நான்கு வகையான செலவுகளுக்கு 12 மாத இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களை சம்பத் அட்டைகள் ஏற்பாடு செய்துள்ளன. Associated Motorways, Access Motors, DIMO Autolab, KIA, Carepoint, Pit & Drive, Stafford Motor Company, Toyota Lanka மற்றும் United Motors ஆகிய இடங்களில் மோட்டார் வாகனம் தொடர்புபட்ட கொடுப்பனவுகளுக்கு இச்சலுகை வழங்கப்படுவதுடன், எந்தவொரு உள்நாட்டு காப்புறுதி நிறுவனத்திலும் இலகு தவணைக் கொடுப்பனவுத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. 1332 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாக மேற்குறிப்பிட்ட கொடுப்பனவுகள் அனைத்தையும் தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களாக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். McLubricants, Pit&Drive, The Pink Auto மற்றும் Toyota ஆகிய இடங்களில் கூடுதல் மோட்டார் வாகன பராமரிப்பு தள்ளுபடிகளும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

வெளியே சென்று விருந்து உண்பதும் தற்போது சிக்கனமாக்கப்பட்டுள்ளதுடன், Cinnamon Grand Colombo, Cinnamon Lakeside, Cinnamon Red, Waters Edge, Movenpick Hotel, Blue Orbit by Citrus அடங்கலாக, மிகவும் பிரபலமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் தம்முடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்துபசாரத்தை அளிக்க விரும்புகின்றவர்களுக்கு 25% வரையான சேமிப்புக்களை சம்பத் அட்டைகள் வழங்குகின்றன. 

மேலும், Great Wall Restaurant, The Tuna & The Crab, Water’s Edge, Radisson Hotels, The Sizzle, Ramada Colombo மற்றும் பல பிரபல உணவகங்களிலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Atlas.lk, Catchme.lk, Coolplanet.lk, Daraz, Dsifootcandy.lk, Wasi.lk, Lassana.com, Wishque.com, Hemasestore.com, Nolimit.lk, Promateworld.com, மற்றும் Takas.lk ஆகிய ஒன்லைன் விற்பனை மையங்களில் ஒன்லைன் தள்ளுபடிகளையும் சம்பத் அட்டைதாரர்கள் பெற்று அனுபவிக்க முடியும்.

2024 ஏப்ரல் 30 வரை கிடைக்கப்பெறுகின்ற மேற்குறிப்பிட்ட “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டுத் தள்ளுபடிகளை பயன்படுத்தி, சரியான வழியில் தமது தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை ஆரம்பிக்குமாறு சம்பத் வங்கி அனைத்து அட்டைதாரர்களுக்கும் அழைப்பு விடுகின்றது. கிடைக்கப்பெறுகின்ற சலுகைகளின் முழுமையான விபரங்கள் மற்றும்

செல்லுபடியாகும் காலம் தொடர்பான விபரங்களை http://www.sampath.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமாகவோ அல்லது 1332 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலமாகவோ அட்டைதாரர்கள் அறிந்துகொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03