19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட்: இங்கிலாந்திடம் 6 விக்கெட்களால் இலங்கை தோல்வி

Published By: Vishnu

03 Apr, 2024 | 11:10 PM
image

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் இலங்கையை 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கையின் மொத்த எண்ணிக்கையில் 5 அபராத ஓட்டங்கள் உட்பட 30 உதிரிகளே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

துடுப்பாட்டத்தில் அஷானி கௌஷல்யா (24), சஞ்சனா காவிந்தி (20) ஆகிய இருவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பின்வரிசை வீராங்கனைகள் மூவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றிராவிட்டால் இலங்கையின் நிலை மோசமடைந்திருக்கும்.

முன்வரிசையில் அணித் தலைவி மனுதி நாணயக்கார (12), பின்வரிசையில் 10ஆம் இலக்க வீராங்கனை ஷஷினி கிம்ஹானி (13 ஆ. இ.), 9ஆம் இலக்க வீராங்கனை  ரஷ்மிக்கா செவ்வந்தி (13), தஹாமி செனத்மா (10) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆவா லீ 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாலட் ஸ்டப்ஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மேரி டெய்லர், சொஃபியா ஸ்மேல், சரிஸ் பாவ்லி, டில்லி கோட்டீன் கோல்மன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

127 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 14.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

டாவினா பெரின், எரின் தோமஸ் ஆகிய இருவரும் 58 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்தத் தொடரில் இதுவே ஆரம்ப விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

டாவினா பெரின் 34 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் எரின் தோமஸ் 25 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர். ஆனால், இருவரும் ஒரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர்.

அவர்களை விட சரிஸ் பாவ்லி ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் யாழ். பரி. யோவான் முன்னான் கிரிக்கெட் விரர் எஸ். சுரேன்குமாரின் புதல்வி அமுருதா சுரேன்குமார் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹிருணி ஹன்சிகா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மனுதி நாணயக்கார 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஷஷினி கிம்ஹானி 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41