விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான அரச நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த விவசாய நவீனமயமாக்கல் சபை - ஜனாதிபதி 

Published By: Vishnu

03 Apr, 2024 | 08:17 PM
image

விவசாயத் துறையுடன் தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை மறுசீரமைப்புச் செய்தல், கண்காணிப்பதற்காக ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் விவசாய நவீன மயமாக்கல் சபையொன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரசாங்க நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே புதியச் சபை நிறுவப்பட உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைத் திட்டம், அதனை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் காமினி சேனாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இந்த கொள்கை திட்டம் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல், நிலைத்தன்மை மற்றும் ஈடுகொடுக்கும் தன்மையை மேம்படுத்துதல், உள்ளக வளர்ச்சி மற்றும் கிராமிய மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை பலப்படுத்தல், சந்தை பிரவேசம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல், நிறுவன மற்றும் நிர்வாகத் செயற்பாடுகளை பலப்படுத்தல், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை வலுவூட்டுதல் உள்ளிட்ட விடயங்களை உள்வாங்கித் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 25 மாவட்டங்களின் 26 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து 26 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு அவற்றுக்கான முன்னோடித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. 

வாழ்வாதார விவசாயத்திலிருந்து விடுபட்டு, பாரிய மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சிகளை உள்ளடக்கிய நவீன விவசாயத்தை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய ஏற்றுமதித் துறையானது தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிப்பதாகவும், நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது விவசாயத் துறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  

இக்கலந்துரையாடலில், நெல் மற்றும் ஏனைய விவசாய பயிர்கள், பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தின் பலதரப்பட்ட அம்சங்களையும் நவீனமயப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பயிர்ச்செய்கைக்காக 500,000 ஏக்கர் நிலத்தை  விடுவித்தல் மற்றும் இலங்கையில் உள்ள விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்தும் ஆராயப்பட்டது. 

விவசாய மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த ஜனாதிபதி, அரச-தனியார் ஒத்துழைப்புக்களை பலப்படுத்த அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர மறுசீரமைப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

விவசாயப் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு, செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தேவையற்ற அரச நிறுவனங்களை இரத்துச் செய்தல் , தனியார் துறையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. 

மேலும், காலநிலை மாற்றங்களின் போதான, நீர் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதற்காக நாட்டில் சிறந்த திட்டமொன்றை செயற்படுத்த வேண்டிதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.  

அத்துடன், விவசாயிகளின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குதல், விவசாய நவீனமயப்படுத்தலுக்கு அவசியமான நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான  வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற சவால்கள் குறித்தும் , நவீன விவசாய முயற்சிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பிலான விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி  கவனம் செலுத்தினர். 

இதற்காக முழுமையான திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி  அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதோடு, அதற்கு முன்னாதாக இது தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவினால் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

விவசாயத்தை நவீனமயப்படுத்தி, விவசாய தொழில்துறையை விரிவுபடுத்தி,நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை  பலப்படுத்தி வறுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.   

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்  சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான  சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சந்ரா ஹேரத், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் உரிய அரச நிறுவன அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில்...

2024-04-23 15:09:52
news-image

யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர...

2024-04-23 15:15:39
news-image

உலக புத்தக தினம் இன்று

2024-04-23 15:22:07
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57