(நெவில் அன்தனி)
சட்டோக்ராமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 192 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் பாகிஸ்தானை பின்தள்ளி 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மேலும் 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிய இலங்கை, இதுவரை 2 வெற்றிகளுடன் 24 வெற்றிப் புள்ளிகளை ஈட்டி 50.00 சதவீத புள்ளிகளுடன் 3 இடங்கள் தாவி 4ஆம் இடத்தை அடைந்துள்ளது.
இதனை அடுத்து 2025இல் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இலங்கை சற்று அதிரித்துக்கொண்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா (68.15%), அவுஸ்திரேலியா (62.50%), நியூஸிலாந்து (50.00%) முதல் 3 இடங்களில் இருக்கின்றன.
2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் தற்போதைய வெற்றியுடன் பெரு உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
இந்த சுழற்சியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு இரண்டு தொடர்கள் நடைபெறவுள்ளன.
இந்த வருட இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை, அடுத்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவை வரவேற்கவுள்ளது.
இந்த இரண்டு தொடர்களிலும் தலா 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த மூன்று தொடர்களிலும் இலங்கை முழுமையான வெற்றிகளை ஈட்டினால் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியனஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM