(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பொருளாதார பாதிப்புக்கு ஜனாதிபதியால் மாத்திரம் நிலையான தீர்வு காண முடியும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்தே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என்று அரசியல் கட்சித் தலைவர்களும்,சுயாதீன வேட்பாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை எவரும் முன்வைக்கவில்லை.
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது எவரும் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.நெருக்கடியான சூழலில் நிபந்தனை விதித்துக் கொண்டு தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே அவதானம் செலுத்தினார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே சவால்களை பொறுப்பேற்றார்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக ஜனாதிபதி எடுத்த சகல தீர்மானங்களுக்கும் நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கினோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவோம்.பொருளாதார நெருக்கடிக்கு அவரால் மாத்திரமே நிலையான தீர்வு காண முடியும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினால் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தற்போதைய மறுசீரமைப்பு தீர்மானங்களை மாற்றியமைக்கும் அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்கள் தீர்மானமிக்கவை.அரசியல் வாக்குறுதிகளுக்கு அவதானம் செலுத்தாமல் பொருளாதார மீட்சியை மாத்திரம் கருத்திற் கொண்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM