மனிதாபிமான பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலி ; தங்கள் நடவடிக்கைகளை இடைநிறுத்திய தொண்டு அமைப்புகள் - காசா பெரும் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கும் அபாயம்

Published By: Rajeeban

03 Apr, 2024 | 03:31 PM
image

காசாவில் மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தொண்டு நிறுவனங்கள் தங்கள் மனிதாபிமான பணிகளை இடைநிறுத்தியுள்ளதை தொடர்ந்து மனிதாபிமான நெருக்கடி தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது.

வேர்ல்ட் சென்ரல் கிச்சனின் வாகனத்தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழு மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவில் மனிதாபிமான பணியி;ல் ஈடுபட்டுள்ள பல அமைப்புகள் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தங்கள் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.

இது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம் என தெரிவித்துள்ள அனெரா என்ற தொண்டு நிறுவனம் பல மனிதாபிமான பணியாளர்களும்  அவர்களது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட நிலையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதுகாப்பான நடவடிக்கை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

மனிதாபிமான உதவிகள் இடைநிறுத்தம் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய மோசமான பாதிப்புகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம் எனினும் மனிதாபிமா உதவி விநியோகத்தின் போது அதிகரிக்கும் ஆபத்துகள் எங்கள் பணியாளர்கள் தாங்கள் மீண்டும் பாதுகாப்பாக பணியாற்ற முடியும் என கருதும்வரை எங்கள் பணிகளை இடைநிறுத்தவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என அனரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் பட்டினியும் வறுமையும் எந்த நேரத்திலும் உருவாகலாம் என கடந்த மாதம் ஐநா தெரிவித்திருந்தது.

பாலஸ்தீன பகுதியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பட்டினியை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

பட்டினி நிலைமை காரணமாக 27 குழந்தைகள் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் எல்லைகளில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடைகளின் மத்தியில் அவசரமாக உணவுதேவைப்படுபவர்களிற்கான உணவை வழங்குவதற்காக சைப்பிரசிலிருந்து கடல்வழி மார்க்கமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் வேர்ல்ட் சென்ரல் கிச்சன் ஈடுபட்டிருந்தது.

இந்த சூழ்நிலையிலேயே திங்கட்கிழமை அதன் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஜோன் சப்மன் ஜேம்ஸ் ஹென்டர்சன் ஜோம்ஸ் கேர்பி மூவரும் தொண்டர் அமைப்பின் பாதுகாப்பு குழுவில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த குழுவின் தலைவரான அவுஸ்திரேலிய பெண் ஜோமி பிரான்கோமும் கனடா போலந்து பிரஜைகளும் பாலஸ்தீன பிரஜையொருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பெண்மணி உலகின் பல நாடுகளில் பணியாற்றியவர்.

வேர்ல்ட் சென்ரல் கிச்சன் ஏற்பாடு செய்த மனிதாபிமான கப்பல்கள் அன்றைய தினம் 400 மெட்ரிக்தொன் உணவுப்பொருட்களுடன் வந்து சேர்ந்தன இதற்கான நிதியை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியிருந்தது.

எனினும் 100 தொன் உணவு இறக்கப்பட்ட நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து கப்பலை மீண்டும் சைப்பிரசிற்கு திரும்புமாறு வேர்ல்ட் சென்ரல் கிச்சன் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை மனிதாபிமான வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டமை குறித்த பல விபரங்களை இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஹரெட்ஸ் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேர்ல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் இலச்சினையுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தொடரணி மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46