சின்னத்திரை தொகுப்பாளர்கள் வண்ணத்திரையிலும், வெள்ளி திரையிலும், டிஜிட்டல் திரையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி சாதனையாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள்.
அந்த பட்டியலில் சன் ரிவியின் தொகுப்பாளரான ஆடம்ஸ் 'கேன்' எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் ஆடம்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேன்' எனும் திரைப்படத்தில் பிரணவி மனுக்கொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ், கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், வி டி வி கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லீ, நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷோபனா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. கருணாநிதி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ப்ளீட் ஃபார்மெட்டில் நட்சத்திரங்களின் முகங்களிலிருந்து சிறிய பகுதியை வெட்டி ஒட்டி வித்தியாசமான முகமாக உருவாக்கப்பட்டிருப்பதால்..கலையை ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தை விரைவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM