'புஷ்பா - தி ரைஸ்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் 'புஷ்பா 2' படத்தின் டீசர் வெளியிடப்படும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா- தி ரூல்' எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், அஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மிரோஸ்லா குபா ப்ரோசெக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். செம்மர கடத்தலை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- வை. ரவி சங்கர் மற்றும் இயக்குநர் சுகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டீசர், நாயகனான அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் எட்டாம் திகதியன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல்... தெலுங்கு திரைப்படங்களுக்கான பான் இந்திய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் வசூலில் சாதனை படைத்தது என்பதும், இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது என்பதும், இப்படம் வெளியாவதற்கு முன்பே கோடிக்கணக்கிலான வணிகத்தை பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM