தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் அசோக் செல்வனின் 'பொன் ஒன்று கண்டேன்'

Published By: Digital Desk 7

03 Apr, 2024 | 04:13 PM
image

'போர் தொழில்', 'ப்ளூ ஸ்டார்' என வரிசையாக வெற்றி படங்களை வழங்கிய நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பொன் ஒன்று கண்டேன்' எனும் திரைப்படம் படமாளிகைகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது.

'கண்ட நாள் முதல்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வி. பிரியா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பொன் ஒன்று கண்டேன்' எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஏ. டி. பஹத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கேரக்டர் லுக் போஸ்டர்ஸ், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று தமிழ் புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக கலர்ஸ் ரிவியில் ஒளிபரப்பாகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் திரைப்படம் படமாளிகையில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், ஏப்ரல் 14 படம் தொலைக்காட்சியில் வெளியான பிறகு இதை ஜியோ சினிமாவில் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18