எம்மில் சிலர் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த உடல் எடையை விட சற்று கூடுதலாக இருப்பர். உடல் எடை சிறிது தானே அதிகரித்திருக்கிறது என கவனியாதிருந்தால் உங்களது இதயம், மூளை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவு அதிகமாகி, இரத்த ஓட்டம் தடைப்பட்டு, மாரடைப்பு, மூட்டு வலி போன்ற துயரங்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்காக தற்போது மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட. மருந்தியல் சிகிச்சைகள் அறிமுகமாகி நல்ல பலனை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் பாதிப்பு இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடும். மூளைக்கு கழுத்து வழியாக ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடும்.
இத்தகைய ரத்த நாளங்களில் இயல்பான அளவைவிட கூடுதலாக தேக்கமடைந்திருக்கும் கொழுப்பு படிவுகள் ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. வேறு சில தருணங்களில் இவை வெடித்து, ரத்த உறைவதற்கும் காரணமாகிறது. இதனால் பாரிய சிக்கல்களுக்கு ஆளாகிறோம்.
நெஞ்சு வலி, மார்பு பகுதியில் அழுத்துவது போன்ற உணர்வு, தோள்கள் மற்றும் கால்கள் பகுதிகளில் திடீரென்று மரத்துப்போதல், பார்வையில் தடுமாற்றம், பேச்சில் தெளிவின்மை, மூட்டு வலி, சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய ரத்த நாளங்களில் கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக சேகரமாகி இருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
மேலும் சிலருக்கு உயர் குருதி அழுத்தம், அதீத கொழுப்பு, நீரிழிவு, உடற்பருமன், இன்சுலின் சுரத்தல் தொடர்பான பிரச்சனை, புகைப்பிடித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உங்களுடைய ரத்த நாளங்களில் கொழுப்பு படியக்கூடும்.
இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவை உயிருக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கலாம்.
இவர்கள் மருத்துவர்கள் அணுகினால், அவர்கள் உங்களை பரிசோதித்து ரத்த பரிசோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் எக்கோ கார்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட், அஞ்சியோ கிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
முடிவுகளின் அடிப்படையில் உங்களுக்கு சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும். நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படும்.
சிலருக்கு PCI எனும் பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன், என்டார்டெரெக்டோமி, ஃபைப்ரினோலிடிக் தெரபி ஆகிய சத்திர சிகிச்சைகளின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
டொக்டர் துர்கா தேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM