திருகோணமலையில் டெங்கு நோய் காரணமாக அண்மையில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் கர்ப்பிணி பெண் ஒருவரும் உயிரிழந்தார். இந்நிலையில்  டெங்கு நோய் தாக்கத்தினால் நேற்று இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளமை திருகோணமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு நோய் காரணமாக திருகோணமலை பள்ளத்தோட்டத்தைச் சேர்ந்த  கர்ப்பிணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்னர் தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நூர் முஹம்மது நுபைர் டெங்கு நோயினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை உட்பட நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு நோய் காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை 23ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு கடந்த 3 மாதங்களில் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இம்மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.