புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி ஆலயம்

Published By: Digital Desk 7

03 Apr, 2024 | 12:56 PM
image

'ஆலயம் செல்வது சாலவும் நல்லது' என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மண்ணில் பிறந்து, புலம் பெயர்ந்து ஐரோப்பிய தேசங்களிலும், அமெரிக்க நாடுகளிலும், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வாழும் எம்முடைய மக்கள் ஆண்டுக்கு ஒரு முறையேனும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவறுவதில்லை. அதிலும் குறிப்பாக ஆன்மீக பூமியாக திகழும் இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொள்வதை தவறவிடுவதில்லை. எங்கு சென்றாலும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அறத்துடன் வாழும் எம்மில் பலரும் இப்பிறவியில் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் பாவங்களை செய்திருப்பர்.

இதனை களைய வேண்டும் என்றாலும் மரண பயம் விலக வேண்டும் என்றாலும் வாழ்க்கையின் இறுதி கட்டங்களை அசௌகரியத்துடனும் மற்றவர்களை சிரமப்படுத்தி வாழாமல், இனிமையாக அமைதியாக வாழ வேண்டும் என விரும்புபவர்களும்  பாவங்களை தொலைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் தவறாது ஸ்ரீ வாஞ்சியம் எனும் தமிழக நகரில் அமையப்பெற்று அருள்பாலிக்கும் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமியை தரிசிக்க வேண்டும். 

இந்த ஆலய வளாகத்தில் உள்ள குப்த கங்கை எனும் தீர்த்த குளத்தில் நீராடி அல்லது அந்த புனித நீரை தலையில் தெளித்துக் கொண்டு முதலில் எமதர்ம ராஜனை வணங்க வேண்டும். இங்கு எமதர்மன் யோக நிலையில் அமர்ந்து அருள் பாலிப்பதாலும், உடன் சித்திரகுப்தர் இடம் பிடித்திருப்பதாலும் உங்களது பாவக்கணக்குகள் கழிக்கப்பட்டு, புண்ணிய கணக்குகள் அதிகரிக்கப்படுகிறது. ஏனென்றால் இங்கு தான் எமதர்மன் சிவபெருமானை வணங்கி தன்னுடைய பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டார். அதனால் வாஞ்சிநாதன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எமதர்மன் அவர்களுடைய பாவக் கணக்குகளை குறைப்பதாக ஐதீகம்.   

இங்குள்ள குப்த கங்கையில் நீராடி அக்கரையில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசிப்பதும் புண்ணிய கணக்கின் ஒரு பகுதி தான். இந்த ஆலயத்தில் மூலவராய் வீற்றிருக்கும் வாஞ்சிநாத பெருமானை வணங்குவதுடன் மங்களாம்பிகை தாயாரையும் வணங்கிட வேண்டும். 

இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வருகை தந்தால் காசிக்கு 108 முறை சென்று முறையான பரிகாரம் மேற்கொண்டதற்கு சமம் என்பது ஆன்மீக பெரியோர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆயுள் விருத்தி தலம் என்பது மட்டுமல்ல விஷ்ணுவும், மகாலட்சுமியும் மீண்டும் ஒன்றிணைந்த தலம் என்பதால்  கணவன் மனைவி இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இந்த தலம் சிறப்பானது.

கார்த்திகை மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இங்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். அவர்கள் அனைவரும் அன்றைய தினம் ஸ்ரீ வாஞ்சிநாத பெருமானைத் தரிசித்து புண்ணியத்தை அதிகரித்துக் கொள்கின்றனர்.

தாயகத்திலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு விமான மூலம் வந்திறங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு புகையிரத மார்க்கமாகவோ அல்லது சாலை மார்க்கமாகவோ பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியாக ஸ்ரீ வாஞ்சியம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. கும்பகோணத்திலேயே சிவபெருமானுக்கு உரிய பூஜை பொருட்களை வாங்கி செல்லலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

2024-05-29 17:41:04
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

2024-05-28 15:12:02
news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24