(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவதும் கடைசியுமான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 192 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை, தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
போட்டியின் கடைசி நாளான இன்று புதன்கிழமை (03) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்க லிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை வெற்றியீட்டிய இந்த டெஸ்ட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த கமிந்து மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.
மேலும், இந்தத் தொடரில் இரண்டு சதங்கள், ஒரு அரைச் சதம் (102, 164, 92 ஆ.இ., 9) உட்பட 367 ஓட்டங்களை மொத்தமாகக் குவித்ததுடன் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய கமிந்து மெண்டிஸ் தொடர் நாயகன் விருதையும் தனதாக்கிக்கொண்டார்.
கமிந்து மெண்டிஸை விட இலங்கையின் இந்த வெற்றியில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, குசல மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் மற்றும் அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகளும் பங்காற்றி இருந்தன.
பங்களாதேஷின் எஞ்சிய 3 விக்கெட்களை வீழ்த்த இலங்கைக்கு 18 ஓவர்களே தேவைப்பட்டது.
பங்காதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் தனி ஒருவராகப் போராடிய மெஹிதி ஹசன் மிராஸ் 110 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 81 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 531 (குசல் மெண்டிஸ் 93, கமிந்து மெண்டிஸ் 92 ஆ.இ., திமுத் கருணாரட்ன 86, தனஞ்சய டி சில்வா 70, தினேஷ் சந்திமால் 59, நிஷான் மதுஷ்க 57, ப்ரபாத் ஜயசூரிய 28, ஏஞ்சலோ மெத்யூஸ் 23, ஷக்கிப் அல் ஹசன் 110 - 3 விக்., ஹசன் மஹ்மூத் 92 - 2 விக்.)
பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 178 (ஸக்கிர் கான் 54, மொமினுள் ஹக் 33, தய்ஜுல் இஸ்லாம் 22, மஹ்முதுல் ஹசன் ஜோய் 21, அசித்த பெர்னாண்டோ 34 - 4 விக்., லஹிரு குமார 19 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 38 - 2 விக்., ப்ரபாத் ஜயசூரிய 65 - 2 விக்.)
இலங்கை 2ஆவது இன்: 157 - 7 விக். டிக்ளயார்ட் (ஏஞ்சலோ மெத்யூஸ் 56, நிஷான் மதுஷ்க 34, ப்ரபாத் ஜயசூரிய 28 ஆ.இ., ஹசன் மஹ்முத் 65 - 4 விக்., காலித் அஹ்மத் 34 - 2 விக்.)
பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 511 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 318 (மெஹிதி ஹசன் மிராஸ் 81 ஆ.இ., மொமினுள் ஹக் 50, லிட்டன் தாஸ் 38, ஷக்கிப் அல் ஹசன் 36, லஹிரு குமார 50 - 4 விக., கமிந்து மெண்டிஸ் 32 - 3 விக்., ப்ரபாத் ஜயசூரிய 99 - 2 விக்.)
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: கமிந்து மெண்டிஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM