பொலிஸாரின் கடைமை நேரத்தில் இரவு விடுதிக்கு அருகில் குடிபோதையில் யுக்திய நடவடிக்கையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கான்ஸ்டபிள் நுகேகொடை நீதிமன்றின் நீதவான் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு குறித்த இரவு விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த கான்ஸ்டபிள் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி இரவு விடுதிக்கு நீதிவானின் பாதுகாப்பிற்காகச் செல்வதாகக் கடிதம் வழங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த கான்ஸ்டபிளுடன் மற்றுமொரு கான்ஸ்டபிளும் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு அருகில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட போது யுக்திய நடவடிக்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவில் பணிபுரிபவர் என்பதுடன் இந்த விடயம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM