மலே­சி­யாவில் நடை­பெற்ற அணிக்கு எழுவர் கொண்ட போர்னியோ றக்பி தொடரின் மகளிர் பிரிவில் இலங்கை மகளிர் அணி முதல் முறை­யாக சம்­பியன் பட்­டத்தை வென்­றது.

இலங்கை மகளிர் அணி, இத்­தொ­டரின் இறுதிப் போட்­டியில் தாய்­லாந்தை 12– 5 என்னும் புள்­ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்­றிக்­கிண்­ணத்தை சுவீ­­ரித்­தது.  

இத்­தொடர் ஆரம்­பித்த முதல் நாளில் ஆரம்ப கட்­டத்­திற்­கு­ரிய இரண்டு போட்­டி­களில் முதற்தர­மான ஆட்­டத்­தினை வெளிப்­­டுத்­தி­யி­ருந்த இலங்கை மகளிர் அணி, அந்­நாளில் சபாஹ் ஈக்கிள்ஸ் அணியை 48-00 எனவும், தாய்­லாந்தை 26-0–5 எனவும் அபா­­மாக வீழ்த்­தி­யி­ருந்­தது

அதனை அடுத்து, அரை­யி­றுதிப் போட்­டியில் மலே­சிய மகளிர் அணிக்கு  29-05 என திகைப்­பூட்­டிய இலங்கை, இறுதிப் போட்­டிக்குத் தெரி­வா­கி­யது. இறு­தியில் தாய்­லாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இலங்கை மகளிர் றக்பி அணி