19 வயதின் கீழ் மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட் : ஆஸி.யை 7 விக்கெட்களால் வென்றது இங்கிலாந்து

Published By: Vishnu

03 Apr, 2024 | 01:22 AM
image

(நெவில் அன்தனி)

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவை 7 விக்கெட்களால் இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியும் பங்குபற்றும் இந்த மும்முனை தொடரில் அவுஸ்திரெலியா தான் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியையே ஈட்டியுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 விக்கெட்களை 29 ஓட்டங்களுக்கு இழந்த அவுஸ்திரேலியா, அணித் தலைவி அமி ஸ்மித், லூசி ஃபின் ஆகியோர் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 91 ஓட்டங்களின் மூலம் கௌரவமான நிலையை அடைந்தது.

அமி ஸ்மித் 45 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் லூசி ஃபின் 27 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் டில்லி கோட்டீன் கொல்மன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொசி க்ரோவ்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆவா லீ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

எரின் தோமஸ் (16), டாவினா பெரின் ஆகிய இருவரும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மொத்த எண்ணிக்கை 66 ஓட்டங்களாக இருந்தபோது ஜொடி க்றூகொக் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் டாவினா பெரினும் அபி நோக்ரோவும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை  இங்கிலாந்துக்கு  அண்மிக்க  உதவினர்.

டாவினா பெரின் 38 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

அபி நோக்ரோவ் 30 ஓட்டங்களுடனும் அமுருதா சுரேன்குமார் ஒரு ஓட்டத்துட னும்  ஆட்டம் இழக்காமலிருந்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிஸ் ஒலிம்பிக் : குறுந்தூர ஓட்டங்களில்...

2024-04-23 12:28:48
news-image

புளோரிடாவில் திறந்தவெளி நீச்சலில் டிலன்க ஷெஹான்...

2024-04-23 12:29:46
news-image

வரலாறு படைத்துவரும் டுப்லான்டிஸின் உலக சாதனை...

2024-04-23 12:18:34
news-image

மும்பை இண்டியன்ஸை எதிர்த்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2024-04-23 02:27:37
news-image

ஐபிஎல்லில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல்...

2024-04-22 23:34:30
news-image

பெண்கள் மட்டும் லண்டன் மரதன்: ஜெப்ச்சேர்ச்சேர்...

2024-04-22 20:13:21
news-image

சப்மனின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து ...

2024-04-22 17:07:36
news-image

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் வலை பந்துவீச்சாளராக...

2024-04-22 15:38:44
news-image

குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில்...

2024-04-22 01:19:28
news-image

பரபரப்பான போட்டியில் பெங்களூருவை கடைசிப் பந்தில்...

2024-04-21 21:19:55
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2024-04-21 15:13:32
news-image

பவர் ப்ளேயில் சாதனை படைத்து நடராஜனின்...

2024-04-21 06:23:36