கொழும்பு, மட்டக்குளி காக்கைதீவு கடற்கரையில் சுமார் 7 அடி நீளமான டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த டொல்பின் வகை மீன் கரையொதுங்கிய நிலையில் அங்கிருந்த கடற்படையினர் மற்றும் நாரா சமுத்திரா பல்கலைக்கழக ஊழியர்கள் அதனை காப்பாற்றுமுகமாக கடலுக்குள் விட்ட நிலையிலும் அந்த டொல்பின் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை, கொழும்பில் காலிமுகத்திடலை அண்டிய கடற்பகுதியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருவதால் அப் பகுதி கடல் தோண்டப்பட்டு மணல் நிரப்பப்படுவதல் கடல்வாழ் உரியினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வகையிலேயே குறித்த டொல்பின் கரையொதுங்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.