துருக்கிய  உள்ளூராட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சி அபார வெற்றி

Published By: Sethu

02 Apr, 2024 | 05:31 PM
image

துருக்கியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது. 

துருக்கியின் உள்ளூராட்சித் தேர்தல்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.  

இத்தேர்தல்களில் எதிர்ககட்சியான குடியரசு மக்களின் கட்சி (சி.எச்.பி.) அதிக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.

81 மாகாண தலைநகரங்களில் 35 சபைகளை எதிர்கட்சியான சி.எச்.பி. வென்றுள்ளது. 24 சபைகளில் மாத்திரம் ஜனாதிபதி தையீப் அர்துவானின் ஏ.கே.பி. கட்சி வென்றுள்ளது.

குர்திஷ் கட்சியான டீ.ஈ.எம். 10 சபைகளையும் இஸ்லாமியக் கட்சியான யேனிடேன் ரெஃபா 2 சபைகளையும் கைப்பற்றியுள்ளன. 

துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல், தலைநகர் அங்காரா, அடானா, புர்ஸா, அன்டால்யா நகரங்கிளலும் சி.எச்.பி. கட்சியின் மேயர்கள் தெரிவாகியுள்ளனர்.  

2002 ஆம் அண்டு அர்துவானின் ஏ.கே.பி. கட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அக்கட்சி அடைந்த மிக மோசமான தோல்வி இதுவாகும்.  

பணவீக்கம் 67 சதவீதமாக அதிகரித்துள்ளமை இத் தேர்தல் பெறுபேறுகளுக்கு ஒரு பிரதான காரணம் எனக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலொன் மக்ஸ்க் திமிர்பிடித்த கோடீஸ்வரர் ;...

2024-04-23 12:18:43
news-image

மோடி மீது சட்ட நடவடிக்கை” -...

2024-04-23 11:50:00
news-image

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் 80க்கும் மேற்பட்ட...

2024-04-23 11:21:01
news-image

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு...

2024-04-23 10:13:02
news-image

இஸ்ரேல் காசா: இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாயின்...

2024-04-23 09:10:37
news-image

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல் -...

2024-04-22 15:53:50
news-image

கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்:...

2024-04-22 11:41:18
news-image

‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில்...

2024-04-22 11:36:41
news-image

 'இஸ்ரேல் நடத்­தி­ய­து' ஒரு தாக்­கு­தலே அல்ல...

2024-04-22 11:19:36
news-image

காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்...

2024-04-22 10:36:01
news-image

மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு...

2024-04-22 10:34:08
news-image

அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை...

2024-04-22 10:18:38