தமிழ் திரையுலகிலிருந்து விரைவில் அரசியல் உலகிற்குள் நடிகர் விஜய் பிரவேசிக்கவிருப்பதால்... அவருடைய திரையுலக இடத்தை கைப்பற்றுவதற்கு தமிழ் திரையுலகிலிருந்து மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களும் போட்டியில் குதித்திருக்கிறார்கள்.
அதில் விஜய் தேவரகொண்டாவும் ஒருவர். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' எனும் திரைப்படம் எதிர்வரும் ஐந்தாம் திகதி என்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேல் ஒன்றில் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இதன் போது விஜய் தேவரகொண்டா பேசுகையில், '' விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இரண்டாவது தமிழ் திரைப்படமான 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். இப்படத்தின் இயக்குநரான பரசுராம் இதற்கு முன் 'கீத கோவிந்தம்' எனும் ஹிட் படத்தினை இயக்கி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்கும் தமிழ் ரசிகர்களின் பேராதரவு இருந்தது. பரசுராமுடன் மீண்டும் இணைந்திருப்பதால் ' தி ஃபேமிலி ஸ்டார்' படத்திற்கு தமிழ் ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
நடுத்தர வர்கத்து இளைஞனின் கதை என்றாலும், ஒவ்வொரு குடும்பத்தில் உயர்வுக்காக போராடும் அனைவருமே ஃபேமிலி ஸ்டார்கள் தான். இந்த திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் நடிப்பதற்காக முன்னணி இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் தமிழ் திரைப்படத்தில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்.'' என்றார்.
பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் விஜய் தேவரகொண்டா, 'சீதா ராமம்' பட புகழ் நடிகை மிருனாள் தாக்கூர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதி பாபு விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. யு. மோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் தமிழ் மொழி முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் ஏப்ரல் ஐந்தாம் திகதியன்றும், இரண்டு வாரங்கள் கழித்து இந்தியில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM