சென்னையின் பிரபலமான இதய சத்திர சிகிச்சை நிபுணரும், நடிகருமான தீரஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டபுள் டக்கர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.
இதனை 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்த நடிகர் பிரபாஸ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டபுள் டக்கர்' எனும் திரைப்படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம். எஸ். பாஸ்கர், முனிஸ் காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'மெலடி கிங்' வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். முழு நீள நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எயர் ஃபிளிக் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்... தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தில் 'லெப்ட்'& 'ரைட்' என்ற பெயருடன் இரண்டு கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நாயகனுடன் இணைந்து தோன்றுவதும், அவை அசால்டாக நடத்தும் கலேபரங்களும், பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதனால் இப்படத்தை பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகர் தீரஜ் இதற்கு முன் 'போதை ஏறி புத்தி மாறி' எனும் படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் என்பதும், சிறிய இடைவெளிக்குப் பிறகு 'டபுள் டக்கர்' எனும் நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் மீண்டும் அவர் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதும், இந்தப் படம் அவருக்கு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் லாபத்தை கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM