'என்னை காப்பாற்றியது ரசிகர்களின் பிரார்த்தனை தான்' - 'மக்கள் நாயகன்' ராமராஜன்

Published By: Digital Desk 7

02 Apr, 2024 | 06:01 PM
image

தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் 'மக்கள் நாயகன்' ராமராஜன். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'சாமானியன்'. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ராகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சாமானியன்' எனும் திரைப்படத்தில் ராமராஜன், நக்ஷா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்னதி, ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், லியோ சிவக்குமார், ராஜா ராணி பாண்டியன், மைம் கோபி, போஸ்ட் வெங்கட், வினோதினி, கே. எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. மதியழகன் தயாரித்திருக்கிறார். 

இவ்விழாவில் 'மக்கள் நாயகன்' ராமராஜன் பேசுகையில், '' கடந்த 2010 ஆம் ஆண்டில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினேன். ரசிகர்களின் பிரார்த்தனையால் மயிரிழையில் உயிர் தப்பித்து பிழைத்தேன். அதிலிருந்து மீண்டு வந்து இப்படி ஒரு படம் நடிப்பேனா.. என நினைத்தது கிடையாது. இது உலக அதிசயம் போல் நடந்திருக்கிறது. இதற்கும் ரசிகர்களின் பிரார்த்தனை தான் காரணம்.

இயக்குநர் ராகேஷ் எனக்கு பொருத்தமாக இருக்கும் வகையில் நல்லதொரு கதையை சொன்னார்.  இந்தப் படத்தின் திரைக்கதை உலகில் உள்ள அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு விடயம். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பெண்மணிகள் மட்டுமல்ல ஆண்களும் கூட கண்ணீர் சிந்துவார்கள். அந்த அளவிற்கு இயக்குநர் ராகேஷ் இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார். என்னை இன்றுவரை ரசிகர்களிடத்தில் வாழவைத்துக் கொண்டிருப்பது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான். இளையராஜா- ராமராஜன் காம்பினேஷனைத்தான் இன்று வரை கேட்கிறேன் என ரசிகர்கள் சொல்வதுண்டு. இந்த திரைப்படத்தில் எனக்கு ஜோடி இல்லை. எனக்கு ஜோடி எம். எஸ். பாஸ்கர் மற்றும் ராதாரவி தான் அதனால் எனக்கு பாடல்கள் இல்லை. ''  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லோகேஷ் கனகராஜின் 'கூலி'யாக மிரட்டும் சுப்பர்...

2024-04-23 16:22:20
news-image

ஹைபர்லிங்க் பாணியில் தயாராகும் 'நிறம் மாறும்...

2024-04-22 22:46:52
news-image

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சோனியா அகர்வாலின்...

2024-04-22 22:47:28
news-image

அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப்பச்சன்

2024-04-22 22:47:36
news-image

ஃபைண்டர் - விமர்சனம்

2024-04-22 22:47:46
news-image

போருக்குப் பின்னரான இருண்ட காலத்தை பேசும்...

2024-04-21 20:17:04
news-image

விஷாலின் 'ரத்னம்' 60 : 40

2024-04-20 17:24:06
news-image

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் 'ஒரு...

2024-04-21 07:23:44
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-21 07:24:08
news-image

நடிகர் கவினின் சம்பளத்தை மேலும் உயர்த்துமா...

2024-04-21 07:25:16
news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38