சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

Published By: Digital Desk 7

02 Apr, 2024 | 02:21 PM
image

எம் மக்களுக்கு 'குறைவான உழைப்பு- நிறைவான ஊதியம்- மகிழ்வான வாழ்க்கை-' என்பதுதான் வாழ்க்கைக்கான லேட்டஸ்ட் எல்லைக்கோடு என தீர்மானித்து, அதில் பயணிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனுடைய மாற்று வடிவம் தான் 'கடினமாக உழைப்பதை விட.. புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும்' எனும் குரல்.

அனைவரும் புத்திசாலிகளாக இருந்தால்... யார் முட்டாள்களாக இருப்பது..? யார் கடினமாக உழைப்பது..? கடின உழைப்பை யார் மேற்கொள்வது..? இதுபோன்ற வினாக்கள் எழும். ஆனால் இதற்கு இவர்களிடத்தில் பதிலில்லை. இது போன்ற வினாக்களை எழுப்பினால்..  கவனமாகத் தவிர்த்து விட்டு, கேப்பிட்டலிசம் பேசி, தங்களை தற்காத்துக் கொள்வர். ஆனால் எம்முடைய முன்னோர்கள் நீங்கள் எத்தனை பிரச்சனைகளில் இருந்தாலும்... எந்த வகையினதான பிரச்சனையில் இருந்தாலும்... அதிலிருந்து வெளிவருவதற்கான அல்லது அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பரிகாரங்களாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக எம்முடைய ஆலயங்களின் அமைப்பு நம் வாழ்க்கை சிக்கல்களில் இருந்து எளிதாக பிடிப்படுவதற்கான பரிகாரத்தைக் கொண்டதாகவே அமைத்திருக்கிறார்கள். நாம் பலரும் பல தருணங்களில் சைவ ஆலயங்களுக்கும், வைணவ ஆலயங்களுக்கும் சென்றிருப்போம். மூலவர் சன்னதியை தரிசித்து விட்டு, வலமிருந்து இடமாக வரும் போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும். இந்த அமைப்பு ஏன்? என்பது குறித்து நாம் இதுவரை சிந்தித்திருக்க மாட்டோம். ஆனால் எம்முடைய முன்னோர்கள் இதற்கு கோமுகி தீர்த்தம் என பெயரிட்டு, இதன் பின்னணியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

எம்மில் பெரும்பாலானவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும் போது தரிசிக்கவே விரும்புவர். ஆனால் இறைவனுக்கு அபிஷேகம் நடந்தவுடன்... இறைவனின் திருமேனியை தழுவிக் கொண்டு வழிந்தோடும் புனித நீர் கோமுகி தீர்த்தம் வழியாக வெளியேறும்.‌அந்த நீரில் தான் எம்முடைய முன்னோர்கள் பரிகாரம் என்ற ஒன்றை  குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த நீர் 90 நாட்கள் கெடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.‌இந்த நீரை நாம் சில தருணங்களில் வலது கையை ஒருங்கிணைத்து பிடித்து தலையில் தெளித்துக் கொண்டிருப்போம் அல்லது அருந்துவது போல் பாவனை செய்துவிட்டு, தலையில் தடவிக் கொண்டிருப்போம். இனிமேல் இதனை நுட்பமாக கவனித்து சரியாக பாவித்தால் இது நம்முடைய பிரச்சனைகளை தீரும் பரிகாரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பரணி மற்றும் மக நட்சத்திர தினத்தன்று சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வரும் நீரை பிடித்து தீர்த்தம் ( கோமுகி தீர்த்தம்) போல் அருந்தி வந்தாலும்.. உங்களுடைய எல்லா கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்திர தினத்தன்று இந்த கோமுகி தீர்த்தத்தை அருந்தினால், பேய், பிசாசு பயம் அகலும்.

அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த கோமுகி தீர்த்தத்தை அருந்தினால்.. கண் தொடர்பான கோளாறுகள் நீங்கும். இவர்கள் மட்டுமல்லாமல் உறக்கத்தின் போது புலம்புபவர்கள்... உளறுபவர்கள்... கனா கண்டு அழுபவர்கள்... ஆகியோர்களும் இந்த அஸ்வினி நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் நல்ல பலன் கிட்டும்.

பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய வேண்டும் என்றால்.., தம்பதிகள் இருவர்களும் தனித்தனியாக கிருத்திகை நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால்... இருவருக்கும் இடையே உள்ள மனப் பிணக்குகள் தீர்ந்து ஒன்றிணைவர்.

குழந்தை பேறில்லாதவர்கள் ரோகிணி நட்சத்திர தினத்தன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த புனித நீர் கோமுகி தீர்த்தம் வழியாக வரும் போது அதனைப் பிடித்து அருந்தினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

எம்மில் சிலர் தங்களது இறுதி காலகட்டத்தின் போது படுக்கையில் இருந்தபடி புலம்புவர். அதிலும் ''நான் இளமையில் பல தவறுகள் செய்திருக்கிறேன்... குற்றங்கள் செய்திருக்கிறேன்... துரோகங்கள் செய்திருக்கிறேன்.. பாவங்கள் செய்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து விடுபட வழியில்லாமல் தவிக்கிறேன்.'' என உண்மையில் மனம் வருந்துவர். இவர்களுக்கு திருவாதிரை நட்சத்திர நாளன்று கோமுகி தீர்த்தத்தை அருந்த வைத்தால் அல்லது அருந்தினால் அவர்களது பாவம் தொலையும். நற்கதி அடைவர்.

அதே தருணத்தில் எம்மில் சிலர் தாங்கள் வாழும் காலத்தில் செய்த பாவங்களை தொலைப்பதற்காக பசுக்களுக்கு அகத்திக்கீரை, புண்ணாக்கு உள்ளிட்ட அதற்குண்டான உணவுப் பொருள்களை வாங்கித் தருவர். இதனால் மனிதர்களுக்கு உண்டான பாவம் குறையும். ஆனால் இதனால் பசுக்கள் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்பினை எதிர்கொள்ளும் பசுக்களுக்கு.. அதனை வளர்ப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் பூச நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை பிடித்து அதனை பசுவை அருந்த வைத்தால் பசு மீண்டும் ஆரோக்கியமாக உலா வரும்.

வியாபாரிகள் ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை பிடித்து, அதனை தங்களுடைய வியாபார பொருட்கள் மீது தெளித்தால்.. லாபம் அதிகரிக்கும்.

வைத்தியர்களும், சத்திர சிகிச்சை நிபுணர்களும் பூர நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால்... அவர்களின் தொழில் சிறக்கும். 'கைராசியான மருத்துவர்' என்ற பெயர் பெறுவர்.

பல்வேறு தடைகளுக்குப் பிறகு திருமண நிச்சயம் நடைபெற்று.. அதன் பிறகு சில விவரிக்க இயலாத காரணங்களால் திருமணம் கைகூடாமல் நின்றுவிடும். வேறு சிலருக்கு சொல்ல முடியாத காரணங்களால் திருமணத்தடை தொடர்ந்து கொண்டிருக்கும். இவர்கள் அனுஷ நட்சத்திரத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தத் தொடங்கினால்.. அதனை தொடர்ந்து மேற்கொண்டால் திருமண தடை அகன்று மண மேடையில் மணமுடித்து மண வாழ்க்கையில் உற்சாகமாக ஈடுபடலாம்.

பாடசாலையில் இயல்பாக படிக்கும் மாணாக்கர்கள் தேர்வு காலங்களில் தேர்வு எழுதும் போது மட்டும் அவர்களுக்கு இனம் புரியாத மன பயம் உண்டாகும். இதனால் தேர்வினை எழுதவே தயங்குவர். பெருபேறுகளும் குறைவாக இருக்கும் என கவலைப்படுபவர்கள் கூட.. சித்தி அடைவதற்காக கேட்டை நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்ததை விட சிறப்பான பெருபேறுகளைப்  பெற்று சித்தி எய்துவர்.

வீடுகளில் உணவு பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படக்கூடாது என்று எண்ணுபவர்கள்... பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள கோமுகி தீர்த்தத்தை திருவோணம் நட்சத்திரத்தன்று பிடித்து அருந்தினால்.. உணவு பஞ்சம் ஏற்படாது. சில தருணங்களில் சில வைணவ ஆலயங்களில் இதனை தீர்த்த பிரசாதமாகவும் தருவர்.  அதனையும் அருந்தலாம்.

எதிரிகள் தொல்லை நீங்க சதய நட்சத்திர நாளில் கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் எதிரிகள் மறைவர்.

விபத்தில் சிக்கி விடுவோமோ..! அல்லது விபத்தை ஏற்படுத்தி விடுவோமோ..! என்ற விபத்து தொடர்பான பயம் இருப்பவர்கள், ரேவதி நட்சத்திர தினத்தன்று கோமுகி தீர்த்தத்தை அருந்தினால் அந்த பயம் விலகி விடும்.

எம்மில் சிலர் சிவாலயங்களில் எந்த தருணத்தில் வெளிப்படும் கோமுகி தீர்த்தத்தை அருந்துவது? என கேட்பர். பெரும்பாலும் நாளாந்தம் காலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் அபிஷேகங்களிலிருந்து வெளியாகும் தீர்த்தத்தில் தான் அதிக பலன் உண்டு அல்லது சில ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் என காலை வேளையில் மேற்கொள்வர். அந்த தீர்த்தத்தையும் கோமுகியில் பிடித்து அருந்தலாம்.

மேலும் நூறாண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த ஆலயத்திற்கும்... அல்லது ஆறு கால பூஜை செய்கின்ற ஆலயத்திற்கும்.. கோமுகி தீர்த்த பரிகாரம் சிறந்த பலனை தரும்.

இனி ஆலயங்களுக்கு செல்லும்போது கோமுகி தீர்த்தத்தை தவறாமல் பயன்படுத்தி, நம் பாவங்களை களைந்து, புண்ணியங்களை சேர்த்துக் கொண்டு வாழ்க்கையில் உயர்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்- சிம்மம்..!?

2024-05-29 17:41:04
news-image

தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள் !

2024-05-28 15:12:02
news-image

வெற்றிகரமான தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்-...

2024-05-27 16:04:42
news-image

தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

2024-05-24 17:46:47
news-image

தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

2024-05-23 17:45:36
news-image

துர் மரணங்களால் ஏற்பட்ட தோஷங்கள் விலகி,...

2024-05-21 17:19:44
news-image

கௌரவம் - மரியாதை - கொடுத்த...

2024-05-18 18:10:29
news-image

தீராத கஷ்டங்களிலிருந்து நிவாரணம் தரும் எளிய...

2024-05-17 18:24:15
news-image

பதவி உயர்வு பெறுவதற்கான எளிய பரிகாரம்..!?

2024-05-16 17:36:46
news-image

உங்களுடைய ஜாதகத்தை வலிமைப்படுத்தும் பீஜ மந்திரம்..!

2024-05-15 17:33:35
news-image

திருமண தடையை அகற்றும் கோமுக தீர்த்த...

2024-05-14 17:44:12
news-image

வீடு கட்டும் பணியில் ஏற்படும் தாமதத்தை...

2024-05-13 17:22:24