அறகலயவில் தேசிய, சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சி : பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் விமல் வலியுறுத்தல்

Published By: Digital Desk 7

02 Apr, 2024 | 02:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

 

அறகலய இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் குறித்து  விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் இரண்டு நாள் விவாதத்தை நடத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (2) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் உரையாற்றியதாவது,

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு  நிறைவடைந்த தினத்தன்று நீங்கள் (சபாநாயகர்) சபைக்கு விசேட உரையாற்றினீர்கள்.

அறகலய வேளையில்  அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும், அரசியல் தரப்பின் மட்டத்திலும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.

'9 செகவுனு' என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை நான் வெளியிட்டேன்.அதில் தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் உங்களுக்கு அழுத்தம் பிரயோகித்ததையும், கொழும்பில் உள்ள தூதரகங்கள் செயற்பட்ட விதத்தையும் பெயர் குறிப்பிட்டு வெளிப்படுத்தியுள்ளேன்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட புத்தகத்தின் முன் அட்டையில் 'சூழ்ச்சி'  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புத்தகத்துக்குள் அவ்வாறு ஏதும் குறிப்ப்பிடப்படவில்லை.

நீங்கள் பொய்யுரைக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அதேபோல் மனசாட்சிக்கு அமைய நானும் பொய்யுரைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் பொய்யுரைக்கவில்லை என்று நம்புகிறேன்.

பொருளாதார நெருக்கடியின் போது  நாட்டின் இறையாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்ட  தரப்பினர் தொடர்பில் நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இரு நாள் விவாதத்தை நடத்த வேண்டும்.

நாட்டின் இறையாண்மையை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தை மறந்து விட்டு செயற்படலாம்  என்று கருதுவது மக்களாணையை அவமதிப்பதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28