கோலாகலமாக நடைபெறவுள்ள கௌலஹேன ஆலய நேர்ந்தளிப்பு விழா

Published By: Digital Desk 7

02 Apr, 2024 | 12:19 PM
image

மிகவும் பிரமாண்டமான முறையில் புதிய பொலிவுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட லிந்துலை, கௌலஹேன புனித பிரான்சிஸ் அசிசீயார் ஆலய நேர்ந்தளிப்பு விழாவானது, எதிர்வரும் சனிக்கிழமை 6 ஆம் திகதியன்று மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கண்டி மறைமாவட்ட ஆயர் அதி. வணக்கத்திற்குரிய வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையினால் காலை 9.30 மணிக்கு ஆலயம் நேர்தளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் இந்த புனித நிகழ்வின் திருப்பலியானது ஆயர் மற்றும் பங்குதந்தைகளுடன் கூட்டாக ஒப்புக்கொடுக்கப்படும்.

இதேநேரம் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசீயாரின் புனித பண்டம் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்துவைக்கப்படவுள்ளது. 

கௌலஹேன ஆலயத்தின் பங்குதந்தை டொஸ்மின்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த புனித நிகழ்வில், அனைவரும் கலந்துகொண்டு புனித பிரான்சிஸ் அசிசீயாரின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கௌலஹேன ஆலயமானது, சுமார் 30க்கும் மேற்பட்ட பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கிய மக்களின் வழிபாட்டுக்குரிய புனித இடமாக காணப்பட்டது.

இந்த ஆலயத்தின் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல அடிப்படை தேவைகள் இன்றி ஆன்மீகள் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே பங்கு தந்தை டொஸ்மின்ராஜின், ஆத்மீகமான பெரும் முயற்சியின் கீழ், பங்கு மக்கள், பொதுமக்கள், வர்த்தர்கள், பொதுநலன் விரும்பிகள் என அனைவரின் பெரும் உதவியுடன் இந்த ஆலயம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32