ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில்  மேலுமொரு இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி 34 வயதானவர் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலுமொரு இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார்  கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.