கடந்த மாதம் 24 ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
24 ஆம் திகதி சிறப்பு அதிரடி படையினரால் ஆறு உழவு இயந்திரங்களுடன் , ஆறு சாரதிகளும் கைது செய்யப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலே அன்றைய தினமே மருதங்கேணி பொலிசாரால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (01) பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு இடம் பெற்றவேளை தலா ஒருலட்சம் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் உழவு இயந்திரங்களில் இருந்த மணல்மண் நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கப்பட்டு உழவு இயந்திரங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி வழக்கிற்கு தவணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட உழவு இயந்திர சாரதிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக குடத்தனை அம்பன் ஊர் எல்லை பகுதியிலிருந்து அம்பன் கிழக்கிலுள்ள ஒவ்வொருவரது வீட்டு வாசல்களிலும் வெடிகளை கொழுத்துயுள்ளனர்.
இதனால் அப்பகுதி சிறுவர்கள் பெருதும் அச்சமடைந்துள்ளதுடன் மக்கள் நடப்பது ஏன்னவென்று புரியாது திகைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM