அ.டீனுஜான்சி
உலகின் சவால் மிக்க தொற்றுநோய்களுள் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் பாதிப்பு முக்கியமானதாக இனங்காணப்படுகிறது. உலகம் முழுவதும் இத்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை காணமுடிகிறது. நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும், விழிப்புணர்வும் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு தன்நம்பிக்கையையும் வாழ்க்கைத் தரத்தையும் அதிகரித்திருந்தாலும், தொற்றாளர்களின் அதிகரிப்பு இன்னும் அவசியமான திட்டங்களுக்கான தேவையை உணர்த்துகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி 2022ஆம் ஆண்டின் இறுதியில் 39 மில்லியன் பேர் தொற்றுடன் வாழ்கின்றனர். இவர்களில் 1.5 மில்லியன் பேர் சிறுவர்கள். மேலும் சம வருடத்தில் 1.3 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் . மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 53 வீதமானவர்கள் பெண்கள். 2022 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி / எயிட்ஸ் தொடர்பான காரணிகளால் 630000 இறப்புகள் சம்பவித்துள்ளன. 2010 முதல் எய்ட்ஸ் தொடர்பான இறப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் 55% ஆகவும், ஆண்கள் மற்றும் சிறுவர்களிடையே 47% ஆகவும் குறைந்துள்ளது .
தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் வருடாந்த அறிக்கையின்படி, இலங்கையில் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டில் 607 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் அதன்படி ,3,661 ஆண்கள்,1,341 பெண்கள், 9 மாற்றுப்பாலினத்தவர்கள் உட்பட மொத்தமாக 5,011 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
2023 இல் 4272 ஆண்கள், 1422 பெண்கள் , 11 மாற்றுப்பாலினத்தவர்கள் உட்பட. வருட இறுதியில் 5,705 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்களில் 694 பேர் புதிய தொற்றாளர்கள். 2022 ஆம் வருடத்தின் ஒப்பிடும் போது , 13 சதவீத அதிகரிப்பை இந்த எண்ணிக்கை காட்டுகிறது .2023 இல் 4 ஆம் காலாண்டுத் பகுதியில் 209 நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இலங்கையில் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி காரணங்களால் உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கையில் குறிப்பிட்டளவு மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. 2019 தொடக்கம் 2023 ஆம் வருட இறுதிவரை இலங்கையில் 271 மரணங்கள் பதிவாகியுள்ளது. 2022ஆம் ஆண்டில் 66 மரணங்களும்.
2023இல் 59 மரணங்களும் சம்பவித்துள்ளது. இந்த எண்ணிக்கையின் படி 2023இல் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2022 ஆம் வருடத்தில் 1,068,309 எச்.ஐ.வி தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டதாக, தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு இணங்க 2030 ஆம் ஆண்டளவில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டுவருவதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில், எச்.ஐ.வி பற்றி மக்களுக்கு கல்வி கற்பித்தல், ஆபத்தில் உள்ள நபர்களை பரிசோதித்தல் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. எனினும் பாலியல் கல்வி இன்மை, விழிப்புணர்வு இன்மை மற்றும் சமூகப்புறக்கணிப்பு உள்ளிட்ட காரணிகளால் எச்.ஐ.வி / எயிட்ஸ் பாதிப்பு அதிகரிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM