மட்டக்களப்பில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

01 Apr, 2024 | 06:53 PM
image

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனது நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

அதன் இறுதி நிகழ்வாக, மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கருகில் சுவாமி விவேகானந்தரின் இத்திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த சிலையை இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த மஹராஜ் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். 

சிலை திரைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சுவாமி விபுலானந்தர் மணிமண்டலத்தின் பொது விழாவும் நடைபெற்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க இராமகிருஷ்ணரின் மந்திரங்கள் ஒலிக்க இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற பூஜை நிகழ்வுகளின் பின்பு சிலை பொதுமக்களின் பார்வைக்காக காட்சியளித்தது. அத்தோடு, ஞாபகார்த்த நினைவுப்படிகமும் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் அக்ஷராத்மானந்த மஹராஜ் கலந்துகொண்டார். 

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில்...

2024-04-23 03:20:48
news-image

ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலய வருஷாபிஷேகம்

2024-04-22 21:00:24
news-image

கேரளா நைற் 

2024-04-22 22:46:43
news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12