தேசிய சதுரங்க சம்பியனாகினர் ரனிந்து, தேவிந்தியா

Published By: Digital Desk 7

01 Apr, 2024 | 04:11 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடத்தப்பட்ட இலங்கை தேசிய சதுரங்க போட்டியின் இறுதிச் சுற்று முடிவில் சர்வதேச மாஸ்டர் ரனிந்து டில்ஷான் லியனகே ஆண்கள் பிரிவிலும் தேவிந்த்யா ஓஷினி குணவர்தன பெண்கள் பிரிவிலும் சம்பியன் பட்டங்களை சூடினர்.

13 சுற்றுகளைக் கொண்ட இலங்கை தேசிய சதுரங்க போட்டிகள் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றுடன் முடிவுக்கு வந்தது.

கடுமையாக போட்டியிட்ட பகிரங்க ஆடவர் பிரிவுக்கான சதுரங்க போட்டியில் லவ்ஃபர் சதுரங்க கழகத்தைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ரனிந்து தில்ஷான் லியனகே, திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தி, 13 மொத்த புள்ளிகளில் 12 புள்ளிகளைப் பெற்று தோல்வி அடையாதவராக சம்பியனானார். 3 ஆவது மற்றும் 12ஆவது சுற்று போட்டிகளை அவர் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டார்.

நாலந்த கல்லூரியின் சர்வதேச மாஸ்டர் எல். எம். சுசல் டி சில்வா 11 புள்ளிகளுடன் சமநிலை முறிப்பு முறையில் இரண்டாம் இடத்தையும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாஸ்டர் ஹர்ஷன திலகரத்ன 11 புள்ளிகளுடன் மூன்றாம்  இடத்தையும்   பெற்றனர்.

பெண்களுக்கான போட்டியில், வைச்சேர்லி சர்வதேச பாடசாலையின் தேவிந்த்யா ஓஷினி குணவர்தன திறமையாகவும் நிதானமாகவும் பங்குபற்றி 11 புள்ளிகளைப் பெற்று சம்பியனானார். மிகக் குறைந்த வயதில் தேசிய சம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையையும் தேவிந்த்யா பெற்றுக்கொண்டார்.

இப் பிரிவில் கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் மாஸ்டர் எஹ்ஷா மிஷேலா பாலி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், களனி பல்கலைக்கழகத்தின் மாஸ்டர் டி. எச். டி. நிக்லேஷா தருஷி 9.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மொத்தமாக ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

ஆண்கள் பகிரங்க பிரிவில் சம்பியனான ரனிந்துவுக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 250,000 ரூபா பணப்பரிசும் பெண்கள் பிரிவில் சம்பியனான தேவிந்த்யாவுக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 200,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10