59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டி : கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் புதிய தேசிய சாதனை

Published By: Digital Desk 7

01 Apr, 2024 | 04:16 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நிறைவுக்கு வந்த 59ஆவது இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.கோலூன்றிப் பாய்தலில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

தியகம விளையாட்டரங்கில் கடந்த வருடம் சச்சின் எரங்க சனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற தேசிய சாதனையை புவிதரன் இம்முறை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

சாவக்கச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் 2021ல் இராணுவத்தில் இணைந்தார். அவர் தற்போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாயாக பணியாற்றுகிறார்.

இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

   

இதேவேளை, ஆண்களுக்கான 4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

4 x 200 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம், 29.93 செக்கன்களில் நிறைவு செய்தே இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் இந்தப் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினர்.

புதிய தேசிய சாதனை படைத்த 4 x 200 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் பொம்படியர் ஜீ.டி.கே.கே. பபாசர நிக்கு, பொம்படியர் பீ.எம.;பீ.எல். கொடிகார, லான்ஸ் பொம்படியர் ஏ.எஸ்.எம். சபான் மற்றும் பணி நிலை சார்ஜன்ட் எஸ்.  அருண  தர்ஷன ஆகியோர் இடம்பெற்றனர்.

இதனைவிட ஆண்களுக்கான 100 மீ., 200 மீ., 400  மீ.,  3000 மீ. தடைதாண்டல், 4 x 400 மீ. தொடர் ஓட்டம், பெண்களுக்கான 400 மீ., 10000 மீ., 4 x 100 மீ. தொடர் ஓட்டம், 4 x 800 மீ. தொடர் ஓட்டம், 4 x 1500 மீ. தொடர் ஓட்டம், பத்து அம்ச நிகழ்ச்சி ஆகிய போட்டிகளில் இராணுவ வீர வீராங்கனைகள் மொத்தமாக 11 புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டினர்.

போட்டியின் சிறந்த மெய்வல்லுநர் வீரராக இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜன் எஸ். அருண தர்ஷனவும் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணி நிலை சார்ஜன் நதிஷா ராமநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு விருதுகளைப் பெற்றனர்.

ஆண்கள் பிரிவில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை சூடியதுடன் இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஒட்டுமொத்த சம்பியனானதுடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய கலப்பு இன 4 x...

2024-05-20 20:10:35
news-image

உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-20 19:04:00
news-image

லங்கா புட்போல் கப் இறுதிப் போட்டி...

2024-05-20 12:54:40
news-image

யோர்க்ஷயர் அணியில் இலங்கை வீரர் விஷ்வா...

2024-05-20 12:38:26
news-image

கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டி மழையால்...

2024-05-20 02:14:27
news-image

கடைசிப் போட்டியில் பஞ்சாபை 4 விக்கெட்களால்...

2024-05-19 20:30:36
news-image

ஜப்பானில் காலிங்க குமாரகே இரண்டாம் இடம்

2024-05-19 15:38:50
news-image

சென்னையை வெளியேற்றி ப்ளே  ஓவ் சுற்றில்...

2024-05-19 05:16:07
news-image

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க...

2024-05-18 15:36:37
news-image

ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் நிர்வாகிகளுக்கான...

2024-05-18 15:29:57
news-image

FIFA மகளிர் உலகக் கிண்ணம் 2027...

2024-05-18 13:45:50
news-image

சாதனை படைத்த இந்திய அணித் தலைவர்...

2024-05-18 13:42:40