(மனோகரன் பிரியங்கா)
மெட்ரோபொலிட்டன் இன்ஸ்டிடியூட் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மென்ட் (MIBM) கல்வி நிறுவனத்தில் வணிகக்கல்வியை வெற்றிகரமாகப் பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா சனிக்கிழமை 30ம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள (BMICH) லோட்டஸ் மண்டபத்தில் இக் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான செல்வரத்தினம் நிமால் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் Dr. ஹர்ஷ டி சில்வா, கெளரவ விருந்தினராக தொழில் பயிற்சி திணைக்களத்தின் முன்னாள் தலைவர் Dr. அஜித் கொலோனே, சிறப்பு விருந்தினராக சார்க் கலாசார மையத்தின் துணை இயக்குநர் Dr. பினா காந்தி, பிராந்திய இயக்குநர் பிரவீன் மகேந்திரன் (ABE,Global), MIBM இன் இயக்குநர் துவாரஹா நிமால், கல்வி விவகாரங்களுக்கான MIBM இன் ஆலோசகரும் புத்தாக்க, தொழில்முனைவு மற்றும் ஆராய்ச்சி முறை விரிவுரையாளர் பேராசிரியர் பூஷன் சொன்னதரா உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுடன் மாணவர்கள் பெற்றோர்கள் என பெறுமளவினர் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
“உங்களுக்கு கிடைப்பது ஒரு சிறிய காகிதம் (certificate) தான். நீங்கள் அதனை பயன்படுத்தினால் மாத்திரம் அதன் மூலம் பயன் கிடைக்கும். நீங்கள் அரசாங்க அலுவலகத்திற்கு சென்றால் நீங்கள் வரிசையில் நிற்பதற்கு இலக்கமொன்றை பெற்று யாரையாவது சந்திக்க வேண்டும். சில வேளைகளில் அவர் மதிய உணவிற்காக சென்றிருப்பார். அல்லது வெளியே மரணச்சடங்கிற்கோ வேறு எங்கோ சென்றிருப்பார்.
இதனால் நீங்கள் திரும்பி சென்றுவிட்டு மறுநாள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அல்லது வரிசையில் முன்னால் நிற்கவேண்டும் என்பதற்காக அங்குள்ள அதிகாரிக்கு இருநூறு முந்நூறு ரூபாய்களை வழங்கவேண்டும்.
இவ்வாறு சிறிய ஊழலில் ஈடுபட்டு வரிசையில் முன்னே செல்லவேண்டும்; படிவங்களை நிரப்பவேண்டும். ஏன் இப்படி செய்கின்றோம். ஐந்து வருடங்களிற்கு முன்னர் இப்படித்தான் செய்தோம் . பத்து வருடங்களிற்கு முன்னர் இப்படித்தான் செய்தோம் . அதனால் இன்றும் செய்து வருகிறோம்.
எனினும் முக்கியமான விடயம் என்னவென்றால் மாற்றமடையும் உலகில் மாற்றுவழிகளில் சிந்திக்காவிட்டால் ஒரே விடயத்தையே மீண்டும் மீண்டும் செய்யப்போகின்றோம்.
இன்று 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை உலக வங்கியினால் உலகில் மிகச்சிறந்த அம்புலன்ஸ் சேவையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது .
இலங்கை போன்ற ஒரு நாட்டினால் நாங்கள் இதனை சாதிக்க முடிந்தது குறித்து பெருமிதம் கொள்ளவேண்டும். ஒரு விடயத்தை செய்வதற்கு 18 வெவ்வேறு படிவங்களை நிரப்பவேண்டிய நாட்டில் இதனை நாங்கள் சாதித்துள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் மெட்ரோபொலிட்டன் இன்ஸ்டிடியூட் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் வெற்றிகரமாக கற்கைகளை நிறைவு செய்த 65 மாணவர்கள் வணிக நிர்வாக முதுமாணி (MBA) பட்டங்கள் மற்றும் 60 பேர் டிப்ளோமா பட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM