USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while you shop’ என்ற மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ள காகில்ஸ்

01 Apr, 2024 | 02:23 PM
image

காகில்ஸ் நிறுவனமானது, ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பின் ஊடாக (USAID), அமெரிக்காவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள மின் வாகனப் பாவனையாளர்கள் (EVs) தங்களுடைய வாகனங்களை மின்னேற்றம் செய்வதற்குரிய திட்டத்தை அமுல்படுத்துகின்றது என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றது.

USAID தனது Sri Lanka Energy Program ஊடாக காகில்ஸ் உடன் இணைந்து கொழும்பில் உள்ள பல காகில்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களில் (Foodcity) EV மின்னேற்றும் நிலையங்களை (EV charging station) நிறுவி வருகின்றது. இந்த அரிய திட்டத்திற்கு தேவையான முதலீடு இரண்டு நிறுவனங்களினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

இலகுவான முறையிலும் குறைந்த செலவிலும் வாகனங்களை மின்னூட்டல் செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதன் மூலம் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாட்டை, முக்கியமாக மின்சார வாகனங்களின் உபயோகத்தை அனைத்து மக்கள் மத்தியிலும் ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாடு முழுவதிலும்   EV  மின்னேற்றும் நிலையங்களின் வலையமைப்பு இருப்பதன் அவசியத்தையும் மற்றும் வலுவான   EV  தரம் மற்றும் அதன் கொள்கைகளின் தேவையையும் உணர்ந்து, USAID Sri Lanka  எரிசக்தி திட்டம், இலங்கையின் நிலையான மின்சாரப்-போக்குவரத்தை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. காகில்ஸ் உடனான இத்திட்டம்,Sri Lanka Energy Program  இன் நோக்கங்களான எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான விளைவுகளைத் தணித்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மார்ச் 21, 2024 அன்று, பௌத்தலோக மாவத்தையில் உள்ள காகில்ஸ் ஃபுட் சிட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவிய கூட்டு முயற்சியை பாராட்டினார். “நாட்டின் அபிவிருத்திக்கான சவால்களுக்குத் தீர்வுகாண தனியார் துறைகளின் பங்களிப்பு முற்றிலும் அவசியம், எனவே இந்த முயற்சி மற்றும் பிற திட்டங்களில் அமெரிக்காவுடனான வலுவான இணைச்செயற்பாட்டிற்காக காகில்ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்றும் அவர் கூறினார். பல்பொருள் அங்காடிகள் போன்ற மக்கள் செல்லும் இடங்களில் EV  மின்னேற்றும் நிலையங்களை அமைப்பதன் மூலம் மீள் புதுப்பிக்க கூடிய சக்திக்கான அணுகலை விஸ்தரிப்பது மட்டுமல்லாமல், நாம் போக்குவரத்து மற்றும் நிலைத்தன்மை பற்றிய மக்களின் சிந்தனையையும் மாற்றுகின்றோம்”; என அவர் கூறினார். 

சந்தன கெலேகம, Senior Manager, Corporate Strategy and Investor Relations காகில்ஸ் சிலோன் பிஎல்சி, இத்திட்டத்தின் சாதகமான விளைவுகள் குறித்து தெரிவிக்கையில், “USAID உடன் இணைந்து இந்த புதுமையான முயற்சியை முன் எடுப்பதில்; காகில்ஸ் மிகவும் ஆர்வத்துடன் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் செலவுக்கான பெறுமதி மற்றும் சௌகரியத்தினை தொடர்ந்து வழங்குவதே எமது நிறுவனத்தின் மூலாதார வணிகக் கோட்பாடாகும், அத்துடன் போக்குவரத்திற்கான நிலைத்தன்மையான சக்தி தீர்வுகளை நோக்கிய தேசிய இயக்கத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்." எனக் கூறினார்.

கொழும்பில் உள்ள ஆறு காகில்ஸ் சில்லறை விற்பனை நிலையங்களில் EV மின்னேற்றும் நிலையங்களை நிறுவுவது இந்தப் பாரிய திட்டத்தின் முதல் கட்டமாகவுள்ளது. அத்தோடு நாடு முழுவதிலுமுள்ள 520 க்கும் மேற்பட்ட காகில்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும்; 70க்கும் மேற்பட்ட KFCஉணவகங்களின்  விரிவான வலையமைப்பை பயன்படுத்தி எதிர்வரும் மாதங்களில் மேலும் பல EV மின்னேற்றும் நிலையங்களை நிறுவ எதிர்பார்க்கின்றோம்.

இந்த புதிய கூட்டுத்திட்டத்தின் மூலம் இலங்கை அனைவருக்கும் ஓர் நிலையான எதிர்காலத்தை உருவாக்ககூடிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டு அணுகுமுறையில் ஒரு முக்கியமான படியை எடுத்துவைக்கத் தயாராகவுள்ளது.

USAID Sri Lanka Energy Program  பற்றியது: 

இலங்கையில் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் (USAID) ஆதரவுடன் இலங்கையில் இச்சக்தித்திட்டம் ; Chemonics International ஆல் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் எரிசக்தித் துறையை பாதுகாப்பான, நம்பகரமான, நிலையான மற்றும் சந்தை அடிப்படையிலான அமைப்பிற்கு மாறுவதற்கு உதவுவதே இலங்கை எரிசக்தித் திட்டத்தின் பிரதான இலக்காகும். இத்திட்டம் நாட்டின் மின்சார கட்டணங்கள் மின்சார உற்பத்தி செலவினை பிரதிபலிப்பதை  மீள்நிறுத்துவது, மீள் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் முதலீடுகளை அதிகரிப்பது, எரிசக்தி திறனின் தேவையை அதிகரிக்க முகாமைத்துவ திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட ஆற்றல் தொழில்நுட்பங்களை பயன்படுத்து போன்ற நோக்கங்களை ஆதரிக்கிறது.

Cargills Ceylon  பற்றியது: 

ஊயசபடைடள நாடு முழுவதும் பரந்த வலையமைபைக் கொண்டுள்ள அணைத்து சமுகங்களுக்கும் சேவை செய்கின்ற உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பாரிய நிறுவனமாகும். சில்லறை விற்பனை, உணவு பொருட்கள் தாயாரித்தல், உணவுகங்கள்;, வங்கி, ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் காகில்ஸ் ஈடுபட்டுள்ளது. இலங்கையர்களுக்கு நியாயமான விலையில் ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குவதற்கும், கிராமிய சமூகங்களை கட்டியெழுப்புவதில் முதலீடு செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் காகில்ஸ் நிறுவனம் வலுவான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்