(ஆர்.சேதுராமன்)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புமாறு தனது நட்பு நாடுகளிடம் பிரான்ஸ் கோரியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக 46 நாடுகளிடமிருந்து 2,185 பொலிஸாரை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பிரெஞ்சு உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் 35 நாடுகள் சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் பிரெஞ்சு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை நடைபெறும் பராலிம்பிக் போட்டிகளின்போது தினந்தோறும் 45,000 பிரெஞ்சு பொலிஸாரை பணியில் அமர்த்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. 20,000 தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 15,000 படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், முக்கிய சர்வதேச விளையாட்டு விழாக்களில் வெளிநாட்டுப் படையினரை ஈடுபடுத்துவது வழக்கமானது.
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்காக கட்டாருக்கு 200 பொலிஸாரை பிரான்ஸ் அனுப்பியிருந்தது. கடந்த வருட உலகக் கிண்ண றக்பி போட்டிகளின்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து 160 படையினரை பிரான்ஸ் வரவேற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM